பீதியில் மக்கள்... இந்தோனேசியாவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் - ரிக்டர் அளவுகோலில் 5.9 ஆகப் பதிவு!

 
இந்தோனேஷியா நிலநடுக்கம்

இந்தோனேசியாவின் சும்பாவா பிராந்தியத்தில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இது அப்பகுதி மக்களிடையே பெரும் பீதியையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.

இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 5.9 ஆகப் பதிவாகியுள்ளது. இது பூமிக்கு அடியில் சுமார் 10 கிலோமீட்டர் (6.21 மைல்) ஆழத்தில் உருவாகியுள்ளதாக ஜெர்மன் புவி அறிவியல் ஆராய்ச்சி மையம் தெரிவித்துள்ளது.

இந்தோனேஷியா இந்தோனேசியா நிலநடுக்கம்

இந்த நிலநடுக்கத்தால் அப்பகுதியிலுள்ள கட்டிடங்கள் குலுங்கியுள்ளன; இதனால் அஞ்சி நடுங்கிய பொதுமக்கள் வீதிகளிலும் திறந்த வெளிகளிலும் தஞ்சம் புகுந்தனர். நிலநடுக்கத்தைத் தொடர்ந்து உடனடி உயிரிழப்புகளோ அல்லது பாரிய பொருட்சேதங்களோ ஏற்பட்டதாக இதுவரை அதிகாரப்பூர்வ தகவல்கள் வெளியாகவில்லை. மேலும், சுனாமி எச்சரிக்கை எதுவும் விடுக்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

பசிபிக் ‘நெருப்பு வளையப்’ பகுதியில் இந்தோனேசியா அமைந்திருப்பதால், அங்கு இதுபோன்ற நிலநடுக்கங்களும் எரிமலை வெடிப்புகளும் அடிக்கடி நிகழ்வது வழக்கm என்பதால் தொடர்ந்து கண்காணிப்புப் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.