நிலச்சரிவில் சிக்கி தவிக்கும் கேரள மக்கள்.. ரூ.25 லட்சம் நிதியுதவி அளித்தார் நடிகர் தனுஷ் !

 
தனுஷ்

கேரள மாநிலம் வயநாடு பகுதியில் உள்ள சூரல்மலை, முண்டகை, மேப்பாடி ஆகிய கிராமங்களில் கடந்த 29ம் தேதி அடுத்தடுத்து ஏற்பட்ட நிலச்சரிவில் 400க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர். அதன்பின்னர், ஆயிரத்துக்கும் மேற்பட்ட வீடுகள் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்ட நிலையில், பலர் மீட்கப்பட்டு நிவாரண முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.

கேரள நிலச்சரிவு

வயநாட்டில் மீட்புப் பணிகள் நடைபெற்று வரும் நிலையில், திரையுலக பிரபலங்கள் பலரும் அங்கு நிவாரணப் பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர். நடிகர்கள் விக்ரம், ஜோதிகா, சூர்யா, கார்த்தி, அல்லு அர்ஜுன், சிரஞ்சீவி, ராஷ்மிகா மந்தனா, ராம்சரண் என பல பிரபலங்கள் நிவாரணம் அளித்த வருகின்றனர்.

தனுஷ்

அந்த வகையில், தற்போது பிரபல நடிகர் தனுஷ் நிவாரணமாக பணம் அனுப்பியுள்ளார். அதன்படி, ரூ. 25 லட்சம்  கேரள முதல்வரின் பொது நிவாரணப் பணிகளுக்காக கொடுத்துள்ளார். 

ஆடி மாதத்தில் சுபகாரியங்களை செய்யலாமா? கூடாதா?!

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

காதலித்து கர்ப்பமாக்கிய காதலன்... கைக்குழந்தையுடன் காதலி தர்ணா