மொத்தமா சென்னை திரும்பும் மக்கள்.. ஸ்தம்பித்தது திருச்சி தேசிய நெடுஞ்சாலை.. 2 நாட்களுக்குப் போக்குவரத்து மாற்றம் - கனரக வாகனங்களுக்குத் தடை!

 
போக்குவரத்து நெரிசல் தேசிய நெடுஞ்சாலை சொந்த ஊர் போக்குவரத்து நெரிசல் தேசிய நெடுஞ்சாலை சொந்த ஊர்

சட்டமன்றத் தேர்தலுக்காகச் சொந்த ஊர்களுக்குச் சென்ற மக்கள் ஒரே நேரத்தில் தென்மாவட்டங்களில் இருந்து மீண்டும் சென்னை திரும்புவதையொட்டி, ஜி.எஸ்.டி சாலையில் ஏற்படக்கூடிய கடும் போக்குவரத்து நெரிசலைத் தவிர்க்க தாம்பரம் மாநகர காவல் துறை சில முக்கிய போக்குவரத்து மாற்றங்களை அறிவித்துள்ளது.

தாம்பரம் மாநகர காவல் ஆணையர் சஞ்சய்குமார் வெளியிட்டுள்ள அறிவிப்பின்படி, இன்று ஏப்ரல் 27 ஞாயிற்றுக்கிழமை  தென் மாவட்டங்களில் இருந்து  செங்கல்பட்டு வழியாக தாம்பரம் நோக்கி வரும் கனரக வாகனங்கள், செங்கல்பட்டு - காஞ்சிபுரம் சாலை வழியாகத் திருப்பி விடப்படும். இவை வாலாஜாபாத், ஸ்ரீபெரும்புதூர் வழியாக பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையை அடைந்து சென்னைக்குள் வரலாம்.

சுங்கச்சாவடி டோல்கேட் நெடுஞ்சாலை போக்குவரத்து நெரிசல்

சிங்கபெருமாள் கோவில் வழியாக வருபவை: இந்த வாகனங்கள் ஓரகடம் மற்றும் ஸ்ரீபெரும்புதூர் வழியாகத் திருப்பி விடப்படும். இவையும் பெங்களூரு தேசிய நெடுஞ்சாலை மூலமாகச் சென்னைக்குள் நுழையலாம்.

கடலோர மாவட்டங்களான  புதுச்சேரி, கடலூர், சிதம்பரம், மயிலாடுதுறை, நாகப்பட்டினம் போன்ற பகுதிகளில் இருந்து வரும் வாகனங்கள் ஜி.எஸ்.டி சாலையைத் தவிர்த்து, கிழக்குக் கடற்கரைச் சாலை அல்லது ராஜீவ் காந்தி சாலை ஆகியவற்றைப் பயன்படுத்தி சென்னைக்குள் வரலாம்.

போக்குவரத்து நெரிசல் ஈசிஆர் ஓஎம்ஆர் என்.எச்.தேசிய நெடுஞ்சாலை வாகன

தேர்தல் முடிந்து லட்சக்கணக்கான மக்கள் ஒரே நேரத்தில் பேருந்துகள் மற்றும் சொந்த வாகனங்களில் நேற்று மாலை முதலே ஒரே நேரத்தில் மொத்தமாக சென்னை திரும்புவதால், பெருங்களத்தூர் மற்றும் தாம்பரம் பகுதிகளில் பயங்கர நெரிசல் ஏற்படத் துவங்கியது. குறிப்பாக திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் பல இடங்களில் போக்குவரத்து ஸ்தம்பித்தது. 

பொதுமக்கள் இந்த போக்குவரத்து மாற்றத்தைப் புரிந்து கொண்டு, பயணத்தைத் திட்டமிட்டுச் சீரான போக்குவரத்துக்கு ஒத்துழைப்பு நல்குமாறு காவல் துறை கேட்டுக் கொண்டுள்ளது.