#BREAKING: 'மக்கள் மேடை'... புதிய இயக்கம் தொடங்கினார் லதா ரஜினிகாந்த் - தமிழக அரசியலில் அடுத்த பரபரப்பு!

 
லதா ரஜினிகாந்த் லதா ரஜினிகாந்த்
லதா ரஜினிகாந்த்

நீண்ட நாட்களாகச் சமூகப் பணிகளில் ஈடுபட்டு வந்த நடிகர் ரஜினிகாந்தின் மனைவி லதா ரஜினிகாந்த், தற்பொழுது 'மக்கள் மேடை' என்ற பெயரில் ஒரு புதிய தனி இயக்கத்தை அதிரடியாகத் தொடங்கி இருப்பது ரஜினி ரசிகர்களிடையேயும், அரசியல் வட்டாரங்களிலும் பெரும் விவாதத்தைக் கிளப்பியுள்ளது. 

தனது புதிய இயக்கத்தின் நோக்கம் மற்றும் எதிர்காலச் செயல்பாடுகள் குறித்து லதா ரஜினிகாந்த் வெளியிட்டுள்ள அதிகாரப்பூர்வ அறிவிப்பில்,  "நமது தமிழகத்தின் ஒட்டுமொத்த வளர்ச்சிக்கும், மக்களின் வாழ்வாதார நன்மைக்காகவும் நாம் அனைவரும்  ஒன்றிணைந்து செயல்பட வேண்டியது அவசியமாகும். அதற்கான ஒரு பொதுவான தளமாக இந்த 'மக்கள் மேடை' இயக்கம் செயல்படும்" என அவர் தெரிவித்துள்ளார்.

முன்னதாக, நடிகர் ரஜினிகாந்த் அவர்கள் 'ரஜினி மக்கள் மன்றம்' என்ற அமைப்பின் மூலம் அரசியல் கட்சி தொடங்கப் போவதாக அதிகாரப்பூர்வமாக அறிவித்து, அதற்கான அனைத்து வேலைகளையும் தீவிரமாகச் செய்து வந்தார். ஆனால், பின்னர் ஏற்பட்ட சில தவிர்க்க முடியாத உடல்நிலைச் சூழல்களால் தனது முடிவை மாற்றிக்கொண்டு அரசியலில் இருந்து முழுமையாக விலகுவதாக அறிவித்தார்.

லதா ரஜினிகாந்த்

ரஜினிகாந்த் அரசியலுக்கு வராமல் ஒதுங்கியதைத் தொடர்ந்து, தமிழ் சினிமாவின் முன்னணி நடிகராக இருந்த விஜய் 'தமிழக வெற்றிக் கழகம்' என்ற கட்சியைத் தொடங்கி, தமிழகத்தின் முதலமைச்சராகப் பொறுப்பேற்றுள்ளார். இந்த ஒரு புதிய அரசியல் மாற்றத்திற்குப் பிறகு, ரஜினியின் குடும்பத்தில் இருந்து லதா ரஜினிகாந்த் ஒரு சமூக இயக்கத்தைத் தொடங்கியிருப்பது மிகுந்த முக்கியத்துவம் வாய்ந்ததாகப் பார்க்கப்படுகிறது.

லதா ரஜினிகாந்த் தற்போதைக்கு இதனை ஒரு 'சமூக இயக்கம்' என்று குறிப்பிட்டிருந்தாலும், தமிழகத்தில்  நிலவி வரும் தவெக அரசு, முதன்மை எதிர்க்கட்சியான திமுக, மற்றும் அண்ணாமலையின் புதிய இயக்கம் ஆகியவற்றுக்கு இடையேயான  அரசியல் போட்டிகளுக்கு மத்தியில், இந்த 'மக்கள் மேடை' இயக்கம் வருங்காலத்தில் எத்தகைய நகர்வுகளை எடுக்கப் போகிறது? ரஜினி ரசிகர்கள் இதில் எந்த அளவிற்குப் பங்கெடுக்கப் போகிறார்கள்? என்ற பலத்த கேள்விகளும் எதிர்பார்ப்புகளும் எழுந்துள்ளன.