மக்கள் பாடகர் கத்தார் காலமானார்... கதறியழுத பொதுமக்கள்! அவசரமாய் கிளம்பிய திருமாவளவன்!

 
கத்தார்

மக்கள் பாடகர் கத்தார் நேற்று காலமானார். செய்தி கேட்டதும் கண்கலங்கிய விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவன் உடனடியாக கண்ணீருடன் ஹைதராபாத் கிளம்பி சென்றார். மக்களின் பாடகர் என்று அன்போடு அழைக்கப்படுகிற கத்தார் மீது திருமாவுக்கு எப்போதுமே தனி பிரியம்.

தனித் தெலுங்கானா மாநிலத்திற்காக போராடியவர் கத்தார். தன்னுடைய புரட்சிகர வரிகளால் மக்களிடையே உணர்ச்சியைத் தூண்டியவர். பிரபல மேடைப் பாடகர் என்று  ஒரு வார்த்தையில் கத்தாரை  ஒதுக்கி விட முடியாது. தன் வாழ்நாள் எல்லாம் மக்களுக்காகவே, மக்களிடையே வாழ்ந்தவர் நேற்று, உடல் நலக்குறைவு காரணமாக காலமானார்.

1949ல் ஹைதராபாத்தில் பிறந்த கத்தாரின் இயற்பெயர் கும்மாடி விட்டல் ராவ். இளம் வயதிலேயே மார்க்சிய சிந்தனைகளால் ஈர்க்கப்பட்ட கத்தார், 1980 வாக்கில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியில் தன்னை இணைத்துக் கொண்டார். இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் பல்வேறு கூட்டங்களிலும், போராட்டங்களிலும் பங்கேற்று பாடல்கள் பாடி தனது பயணத்தை தொடங்கினார்.

அடுத்ததாக தனி தெலுங்கானா மாநிலம் கோரிக்கையை முன் வைத்து களமாடத் தொடங்கினார். பல பாடல்கள் மூலம் மாநிலம் முழுவதும் புரட்சித்தீ மூட்டினார். தனது பாடல்களின் மூலம் மக்கள் பிரச்சனைகளை அழுத்தமாக பதிவு செய்ததால் 'மக்கள் பாடகர்' என்று அழைக்கப்பட்டார்.

2010ல் நக்சல் இயக்கச் சார்பாளராகச் செயல்பட்டு வந்த கத்தார், பின்னாட்களில் அம்பேத்கரின் கொள்கைகளால் ஈர்க்கப்பட்டார். ஒடுக்கப்பட்ட மற்றும் பிற்படுத்தப்பட்ட மக்களை ஒருங்கிணைத்து, தெலங்கானா ப்ரஜா முன்னணி என்ற இயக்கத்தைத் தொடங்கி போராட்டங்களை முன்னெடுத்தார். 

கத்தார்

மக்களுக்காகவே தனது வாழ்வு அர்ப்பணித்துக் கொண்ட அவர் சில காலமாக இதய நோயால் அவதிப்பட்டு வந்தார்.உடல் நலம் பாதிக்கப்பட்டு சமீபத்தில் ஹைதராபாத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார். இந்நிலையில் சிகிச்சை பலனின்றி தனது 77வது வயதில் கத்தார் உயிரிழந்தார். மக்கள் பாடகர் கத்தாரின் உடலுக்கு பல்வேறு அரசியல் கட்சிகளின் தலைவர்கள் மரியாதை செலுத்தி வருகின்றனர். 

இதையும் பிடிச்சிருந்தா படிச்சு பாருங்க

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

ஆடி மாதத்தில் சுபகாரியங்களை செய்யலாமா? கூடாதா?!

ஆடி மாதத்தில் புதுமணத் தம்பதியரை ஏன் பிரித்து வைக்கிறார்கள் தெரியுமா?

மாங்கல்ய தோஷம் நீங்க ஆடி மாசத்துல இதைச் செய்ய மறக்காதீங்க!

From around the web