கமிஷன் யாருக்கு போனது முதல்வரே? பெரியார் அறிவுலக புத்தகக் கொள்முதல் சர்ச்சையில் ஸ்டாலின் சராமாரி கேள்வி!

 
ஸ்டாலின்

 

கோவை பெரியார் அறிவுலகத்தில் புத்தகங்கள் வாங்கியதில் முறைகேடு நடந்ததாக எழுந்துள்ள சர்ச்சை தமிழக அரசியலில் புதிய விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்த விவகாரம் தொடர்பாக முதலமைச்சர் விஜய்க்கும் தவெக அரசுக்கும் திமுக பல்வேறு கேள்விகளை எழுப்பியுள்ளது.

பெரியார் அறிவுலகம் கோவை

தினகரன் வெளியிட்டுள்ள செய்தியின்படி, பெரியார் அறிவுலகத்தில் அகல்விளக்கு மற்றும் பீனிக்ஸ் பதிப்பகங்களின் சில புத்தகங்களில் ஜூன் மாதத் தேதியுடன் முத்திரை இடப்பட்டுள்ளதாக திமுக தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதே இடத்தில் உள்ள பிற பதிப்பகங்களின் புத்தகங்களில் மார்ச் மாத முத்திரை இருப்பதாகவும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

இதன் அடிப்படையில், சம்பந்தப்பட்ட புத்தகங்களை எப்போது வாங்க முடிவு செய்யப்பட்டது, கொள்முதல் ஆணை எப்போது வழங்கப்பட்டது, புத்தகங்களைத் தேர்வு செய்த குழுவின் பரிந்துரைப் பட்டியல் எங்கே என திமுக கேள்வி எழுப்பியுள்ளது. மேலும், பதிப்பகங்களுக்கு வழங்கப்பட்ட தொகை மற்றும் பணப் பரிவர்த்தனை விவரங்களையும் அரசு வெளியிட வேண்டும் என வலியுறுத்தியுள்ளது.

தந்தை பெரியார் அறிவுலகம் கோவை

தேதிகளைச் சுட்டிக்காட்டிய திமுக

மே 31-ம் தேதி முதல் ஆகஸ்ட் 22-ம் தேதி வரை பெரியார் அறிவுலகப் பணிகள் மற்றும் புத்தகங்கள் தொடர்பாக வெளியான தகவல்களைத் தொகுத்து திமுக கேள்விகளை முன்வைத்துள்ளது. இந்தக் குற்றச்சாட்டுகள் குறித்து அரசு தரப்பின் விளக்கமும், கொள்முதல் ஆவணங்களும் வெளியானால்தான் சர்ச்சையின் உண்மை நிலை தெளிவாகும்.