என் மகனோட பெர்சனல்.. இன்பநிதியின் ரகசிய சேட்டைக் குறித்து உதயநிதி பேச்சு !!

 
இன்பநிதி

திமுக மீது எதிர்க்கட்சிகள் முன்வைக்கும் விமர்சனம் வாரிசு அரசியல். கருணாநிதி தொடங்கி இன்னும் அரசியலுக்கே வராத இன்பநிதி வரை எதிர்க்கட்சியினர் விமர்சனம் செய்து வருகின்றனர். 

முதலில் விஜய் நடித்த 'குருவி' திரைப்படத்தின் மூலம் தயாரிப்பாளராக அறிமுகமானவர் உதயநிதி ஸ்டாலின். பின்னர் நடிகராக மாறிய உதயநிதி ஸ்டாலின், அடுத்தடுத்து படங்களில் நடிக்க துவங்கினார். நடிகர், தயாரிப்பாளர், விநியோகஸ்தர் என்பதை தாண்டி, அரசியலில் களமிறங்கினார். 

ஏற்கனவே நடைபெற்ற நாடாளுமன்ற தேர்தல், சட்டமன்ற தேர்தலில் உதயநிதி ஸ்டாலின் சூறாவளி பிரச்சாரம் மேற்கொண்டார். தமிழகம் முழுவதும் இவரது பிரச்சாரம் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியது என்றே கூறலாம். அதோடு நடந்து முடிந்த சட்டமன்றத் தேர்தலின் போது, சேப்பாக்கம் தொகுதியில் போட்டியிட்ட உதயநிதி வெற்றிபெற்று சட்டமன்ற உறுப்பினராக பதவியேற்றார்.

இன்பநிதி

இதைத்தொடர்ந்து சமீபத்தில் இவருக்கு விளையாட்டுத்துறை அமைச்சர் பதவியும் அளிக்கப்பட்டது. தற்போது தொடர்ந்து மக்கள் பணியில் கவனம் செலுத்த உள்ளதால், திரைப்படத்தில் நடிப்பதை நிறுத்தி விட்டதாக அதிரடியாக கூறினார். இயக்குனர் மாரி செல்வராஜ் இயக்கத்தில் நடித்து வரும் 'மாமன்னன்' திரைப்படம் தான், தன்னுடையை கடைசி திரைப்படம் என கூறிய இவர், கமலஹாசன் தயாரிப்பில் நடிக்க இருந்த படத்தில் இருந்தும் விலகினார்.

இந்நிலையில் 'கண்ணை நம்பாதே' பட ப்ரோமோஷன்காக தனியார் ஊடகம் ஒன்றில் பேட்டி கொடுத்த உதயநிதியிடம், அவருடைய மகன் இன்பநிதி பெண் தோழியோடு நெருக்கமாக இருந்த போது எடுக்கப்பட்ட புகைப்படங்கள் வெளியாகி சர்ச்சையானது குறித்து கேள்வி எழுப்பப்பட்டது.

இன்பநிதி

இதற்கு பதிலளித்த உதயநிதி, தன்னுடைய மகனுக்கு 18 வயது ஆகிவிட்டது. இது அவருடைய பர்சனல். எனக்கும், என்னுடைய மனைவிக்கும், மகனுக்குமான விஷயம் இது. எனவே இதைப்பற்றி வெளியே சொல்ல விரும்பவில்லை. இது அவருடைய பர்சனல், இதற்குள் நானே ஒரு லிமிட்டை தாண்டி தலையிட முடியாது என்று முதல்முறையாக மகனின் சர்ச்சை குறித்து பதிலடி கொடுத்துள்ளார்.

From around the web