பட்டினப்பாக்கம் புதிய தலைமைச் செயலகம் அமைப்பதற்கு எதிராக பசுமைத் தீர்ப்பாயத்தில் வழக்குத் தாக்கல்!

 
பட்டினப்பாக்கம்

சென்னை பட்டினப்பாக்கத்தில் பல நூறு கோடி ரூபாய் செலவில் புதிய தலைமைச் செயலகம் கட்டப்படுவதை எதிர்த்துத் தென் மண்டல தேசிய பசுமைத் தீர்ப்பாயத்தில் வழக்குத் தொடரப்பட்டுள்ளது. உரிய சுற்றுச்சூழல் அனுமதிகள் பெறப்படவில்லை என மனுவில் குற்றம் சாட்டப்பட்டுள்ளது.

புதிய தலைமை செயலகம் பட்டினப்பாக்கம்

சென்னை பட்டினப்பாக்கம் பகுதியில் ரூ.1,200 கோடி மதிப்பீட்டில் புதிய தலைமைச் செயலகம் அமைக்கும் திட்டமானது அறிவிக்கப்பட்டு அதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இந்தத் திட்டத்திற்கு எதிராக வழக்கறிஞர் விஜய் ஆனந்த் என்பவர் தென் மண்டல தேசிய பசுமைத் தீர்ப்பாயத்தில் மனு ஒன்றைத் தாக்கல் செய்துள்ளார்.

பட்டினப்பாக்கம்

புதிய தலைமைச் செயலகம் அமைப்பதற்காகத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள இடத்திற்கு உரிய கடலோர ஒழுங்குமுறை மதிப்பீடோ அல்லது முறையான சுற்றுச்சூழல் ஆய்வுகளோ மேற்கொள்ளப்படவில்லை என்று மனுவில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. மேலும், இந்த இடத்தில் தலைமைச் செயலகம் அமைப்பது சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீட்டு ஆணையத்தின் அறிவிப்புகளுக்கு எதிரானது என்றும் அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.