நாடு முழுவதும் பெட்ரோல், டீசல் விலை அதிரடி உயர்வு - வாகன ஓட்டிகள் அதிர்ச்சி!

 
பெட்ரோல் பெட்ரோல்

சர்வதேச சந்தையில் நிலவி வரும் கச்சா எண்ணெய் தட்டுப்பாடு மற்றும் அரசியல் சூழல்கள் காரணமாக, இந்தியாவில் பெட்ரோல் மற்றும் டீசல் விலையை எண்ணெய் நிறுவனங்கள் இன்று (மே 15, 2026) உயர்த்தியுள்ளன. இந்தத் திடீர் விலை உயர்வு சாமானிய மக்களின் பட்ஜெட்டில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.

அமெரிக்கா மற்றும் ஈரான் இடையே நிலவி வரும் போர் பதற்றம் காரணமாக, உலகளாவிய கச்சா எண்ணெய் விநியோகத்தில் பெரும் முட்டுக்கட்டை ஏற்பட்டுள்ளது. குறிப்பாக, உலகின் மிக முக்கியமான நீர்வழியான ஹார்மூஸ் ஜலசந்தியில் நிலவும் போக்குவரத்துச் சிக்கல்கள் சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலையை விண்ணைத் தொடச் செய்துள்ளன. இதன் எதிரொலியாகவே, உள்நாட்டிலும் எரிபொருள் விலையை உயர்த்த வேண்டிய கட்டாயத்திற்கு எண்ணெய் நிறுவனங்கள் தள்ளப்பட்டுள்ளன.

பெட்ரோல்

இன்று காலை முதல் அமலுக்கு வந்துள்ள இந்த விலை மாற்றத்தின்படி  நாடு முழுவதும்: பெட்ரோல் மற்றும் டீசல் விலை லிட்டருக்குச் சராசரியாக 3 ரூபாய் உயர்த்தப்பட்டுள்ளது. தமிழகம் மற்றும் ஆந்திராவில் மாநில வரி மற்றும் போக்குவரத்துச் செலவுகளைக் கணக்கில் கொண்டு, தமிழகம் மற்றும் ஆந்திரா உள்ளிட்ட மாநிலங்களில் பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ.3.29-ம், டீசல் விலை ரூ.3.14-ம் அதிகரித்துள்ளது.

சென்னையில் நேற்று வரை சுமார் 100.80 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்ட ஒரு லிட்டர் பெட்ரோல், இந்த விலை உயர்விற்குப் பிறகு 103.90 ரூபாயைத் தாண்டியுள்ளது. அதேபோல், டீசல் விலையும் கணிசமாக உயர்ந்து 92 ரூபாயைத் கடந்து விற்பனை செய்யப்படுகிறது.

இன்று (டிசம்பர் 08) பெட்ரோல், டீசல் விலை நிலவரம்!!

இந்தத் திடீர் விலை உயர்வு வாகன ஓட்டிகளை மட்டும் இன்றி, அனைத்துத் தரப்பு மக்களையும் பாதிக்கும் என அஞ்சப்படுகிறது. பெட்ரோல், டீசல் விலை அதிகரிப்பதால் சரக்கு போக்குவரத்துச் செலவு உயர்ந்து, காய்கறிகள் உள்ளிட்ட அத்தியாவசியப் பொருட்களின் விலை அதிகரிக்க வாய்ப்புள்ளது.

ஆட்டோ மற்றும் வாடகை கார் கட்டணங்கள் உயரும் சூழல் உருவாகியுள்ளது. சர்வதேச அளவில் போர் பதற்றம் தணிந்து, கச்சா எண்ணெய் விநியோகம் சீரானால் மட்டுமே மீண்டும் விலை குறைய வாய்ப்புள்ளதாகப் பொருளாதார நிபுணர்கள் தெரிவிக்கின்றனர். அதுவரை எரிபொருள் சிக்கனமே தற்போதைய தீர்வாகப் பார்க்கப்படுகிறது.