கோவையில் பெட்ரோல் குண்டு வீச்சு... நள்ளிரவில் பரபரப்பு!

 
பெட்ரோல் குண்டு


கோவையில் வினோபாஜி நகரில் நள்ளிரவில் பெட்டிக்கடை ஒன்றின் மீது பெட்ரோல் குண்டு வீசப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கோவை வினோபாஜி நகரில் உள்ள பெட்டிக்கடை ஒன்றில் நேற்று இரவு இளைஞர்கள் சிலர் சிகரெட் வாங்கி விட்டு, பணம் தர மறுத்து தகராறில் ஈடுபட்டுள்ளனர். இதனால் கடைக்காரருக்கும், இளைஞர்களுக்கும் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது.

போலீஸ்

அங்கிருந்து சென்ற இளைஞர்கள், திரும்ப சிறிது நேரம் கழித்து வந்து, “எங்களிடமே பணம் கேட்கறீயா?” எனக்கூறி பெட்டிக்கடையின் மீது திடீரென பெட்ரோல் குண்டை வீசியுள்ளனர். இதனால், பெட்டிக்கடை சேதமடைந்தது.இந்த சம்பவம் குறித்து தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார், கடைக்காரரிடம் விசாரித்தார். போலீசாரின் விசாரணையில், பெட்டிக்கடைக்காரரிடம் சிகரெட்டுக்கு பணம் தர மறுத்து, பெட்ரோல் குண்டு வீசியது வினோபாஜி நகரை சேர்ந்த வரதராஜன் (25) என்று தெரிய வந்தது.

ஆம்புலன்ஸ்

வரதராஜனையும், அவருடன் வந்த மேலும் இரு இளைஞர்களையும் போலீசார் தேடி வருகின்றனர். தேர்தல் கட்டுப்பாடுகள் அமலுக்கு இருக்கும் நேரத்தில், பல முக்கிய தலைவர்கள் சுற்றுப்பயணம் செய்து வரும் நிலையில், கோவையில் பெட்ரோல் குண்டு வீசப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

பங்குனி உத்திரத்தின் மகத்துவம் தெரிஞ்சுக்கோங்க..!

பங்குனி மாத பண்டிகைகள், விசேஷ நாட்கள்.... முழு பட்டியல்!

திடீர் ராஜ யோகத்தால் பணமழை கொட்ட போகும் 6 ராசிக்காரர்கள்