தீபாவளி ட்ரீட்... நாடு முழுவதும் பெட்ரோல், டீசல் விலை ரூ.4 வரை விலை குறைப்பு?!

 
இன்று (டிசம்பர் 08) பெட்ரோல், டீசல் விலை நிலவரம்!!
 

சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை மிகவும் குறைந்து விட்ட போதிலும் நாடு முழுவதும் சமீப காலங்களாக பெட்ரோல், டீசல் விலை குறைக்கப்படாத நிலையில், தற்போது பெட்ரோல், டீசல் விலை ரூ.4 வரை குறைக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 

பெட்ரோல், டீசல் விலை கணிசமான அளவு குறைக்கப்படும் என மத்திய பெட்ரோலியத்துறை அமைச்சர் ஹர்தீப்சிங் புரி தெரிவித்திருப்பது வாகன ஓட்டிகளிடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த அறிவிப்பின் மூலமாக பெட்ரோல், டீசல் விலையானது 1 லிட்டருக்கு ரூ.4 வரை குறையக் கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது.

பெட்ரோல் மோசடி

பல மாதங்களாகவே ரஷ்யாவில் இருந்து கச்சா எண்ணெய் மலிவான விலைக்கு கொள்முதல் செய்யப்பட்ட போதிலும் நாட்டில் பெட்ரோல், டீசல் விலை குறைக்கப்படாமலேயே பழைய விலையில் நீடித்து வந்தது. இந்த விலை குறைவான கொள்முதல் மூலமாக தனியார் எண்ணெய் எரிபொருள் நிறுவனங்கள் மட்டுமே இதுவரை ஆதாயம் அடைந்து வருகின்றன. 

இந்நிலையில் பெட்ரோல், டீசல் டீலர்களுக்கான கமிஷன் தொகையை அதிகரிப்பதாக எண்ணெய் நிறுவனங்கள் அறிவித்துள்ளன. இந்த அறிவிப்பை மேற்கோள்காட்டி பேசிய மத்திய பெட்ரோலியத் துறை அமைச்சர் ஹர்தீப்சிங் புரி, எண்ணெய் நிறுவனங்களின் முடிவு வரவேற்புக்குரியது என்றும், எண்ணெய் நிறுவனங்களின் இந்த முடிவால் நாட்டின் பல்வேறு மாநிலங்களில் பெட்ரோல், டீசல் விலை கணிசமாக குறையும் என்றும் தெரிவித்தார். தற்போது சட்டசபை தேர்தல் நடைபெற உள்ள மகாராஷ்டிரா, ஜார்க்கண்ட் ஆகிய மாநிலங்களில் இந்த விலை குறைப்பு பின்னர் அமல்படுத்தப்படும் என்று மத்திய அமைச்சர் குறிப்பிட்டார். 

பெட்ரோல்

எனினும் மகாராஷ்டிரா, ஜார்க்கண்ட் மாநில சட்டசபை தேர்தல் களம், பாஜகவுக்கு கடும் சவாலாக இருக்கும் நிலையில் இந்த முடிவு வாக்காளர்களிடம் கடுமையான தாக்கத்தை ஏற்படுத்தும் என்று அரசியல் விமர்சகர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர். தீபாவளிக்கு பிறகான அடுத்து வரும் நாட்களில் விரைவில் பெட்ரோல், டீசல் விலை குறையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

From around the web