பெட்ரோல் பங்க்கில் பயங்கரம்... இரும்பு ஸ்டாண்டைத் தள்ளியபோது மின்சாரம் பாய்ந்து 2 பேர் துடிதுடித்து பலி!

 
மின்சாரம் மின்சாரம்

தெலங்கானா மாநிலத்தில் பெட்ரோல் பங்க் ஒன்றில் இரும்பு ஸ்டாண்டை நகர்த்த முயன்றபோது, எதிர்பாராத விதமாக உயர் அழுத்த மின்சாரம் பாய்ந்ததில் ஓட்டுநர் உள்ளிட்ட இருவர் சம்பவ இடத்திலேயே துடிதுடிக்க உயிரிழந்தனர்.

தெலங்கானா மாநிலம் மஞ்சிரியால் மாவட்டம், தண்டேபள்ளி மண்டலத்திற்கு உட்பட்ட மெதிரிபேட்டை பகுதியில் இந்த விபத்து நிகழ்ந்துள்ளது. அங்குள்ள ஒரு பெட்ரோல் பங்க்கில் இருந்த கனமான இரும்பு ஸ்டாண்ட் ஒன்றை நகர்த்துவதற்காக, ஓட்டுநர் நாகராஜு மற்றும் தினக்கூலி தொழிலாளி நாராயணா ஆகியோர் முயன்றுள்ளனர்.

வீடியோ

அந்த இரும்பு ஸ்டாண்டைத் தள்ளிச் சென்றபோது, எதிர்பாராத விதமாக மேலே சென்ற 11 கிலோவோல்ட் (11 KV) உயர் அழுத்த மின்சாரக் கம்பியில் அந்த ஸ்டாண்ட் உரசியுள்ளது. விநாடி நேரத்தில் இரும்பு ஸ்டாண்ட் வழியாக மின்சாரம் பாய்ந்ததில், அதைப் பிடித்துக்கொண்டிருந்த நாகராஜு மற்றும் நாராயணா ஆகிய இருவரும் தூக்கி வீசப்பட்டனர். மின்சாரம் தாக்கியதில் உடல் கருகி இருவரும் அந்த இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர்.

மின்

கண்ணிமைக்கும் நேரத்தில் நடந்த இந்த கோர விபத்தைக் கண்டு அக்கம் பக்கத்தினர் அலறியடித்து ஓடி வந்தனர். தகவல் அறிந்து வந்த போலீசார், உடல்களைக் கைப்பற்றி பிரேதப் பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். ஒரே நேரத்தில் இருவர் உயிரிழந்த சம்பவம் அந்தப் பகுதியில் பெரும் சோகத்தையும், அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.