மத்திய அரசு ஊழியர்களுக்கு பிஎப் வட்டி விகிதம் உயர்வு!!

 
பிஎப்


இந்தியா முழுவதும் பரவிய கொரோனா  காரணமாக  கடந்த மார்ச் 2022ல், 2021-2022 ம் ஆண்டுக்கான தொழிலாளர் வருங்கால வைப்பு நிதியான பி.எஃப் மீதான வட்டி 8.10% சதவீதமாக குறைக்கப்பட்டது.   2023 மார்ச்சில்   டெல்லியில் நடைபெற்ற  கூட்டத்தில் இபிஎஃப்ஒ, 2022-23-ம் ஆண்டுக்கான வருங்கால வைப்பு நிதி வட்டி வகிதம் 8.15 சதவீதமாக உயர்த்தப்பட்டதாக அறிவிக்கப்பட்டுள்ளது. சிபிடிக்குப் பிறகு  வட்டிவிகித உயர்வு நிதியமைச்சகத்தின் ஒப்புதலுக்காக அனுப்பி வைக்கப்பட்டது.

பிஎப்


புதிய வட்டி விகிதத்துக்கு நிதியமைச்சகம் மூலமாக அரசின் அங்கீகாரம் கிடைத்துள்ளதாகவும், இபிஎஃப்ஒ புதிய வட்டி விகிதத்தை வழங்கும்படியும் சுற்றறிக்கை அனுப்பியுள்ளது. ஆகஸ்ட் மாதம் முதல் இதற்கான பலனை மத்திய அரசு ஊழியர்கள் பெறலாம் என தகவல்கள் வெளியாகியுள்ளன.  2024ல் பாராளுமன்ற தேர்தல் வர இருக்கும் நிலையில்   பிஎஃப் வட்டி விகிதத்துக்கு மத்திய அரசு ஒப்புதல் அளித்துள்ளது குறிப்பிடத்தக்கது.  மத்திய அரசு ஊழியர்களுக்கு மகிழ்ச்சியான செய்தி ஒன்றை மத்திய தொழிலாளர் நலத்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ளது. இது குறித்து  அனைத்து துறை அமைச்சகத்திற்கு அனுப்பியுள்ள சுற்றறிக்கை ஒன்றை அனுப்பியுள்ளது.

பிஎப்

இதில்  தொழிலாளர்களுக்கான வருங்கால வைப்பு நிதி வைப்புத்தொகை வட்டி விகிதம் 8.15%ஆக மத்திய அரசு உயர்த்தியுள்ளது என்பதை மத்திய தொழிலாளர் நல அமைச்சகம் மகிழ்ச்சியுடன் தெரிவித்துக்கொள்கிறது. எனவே இதன் அடிப்படையில் தொழிலாளர்களுக்கு அவர்களுக்கான பி.எஃப். வட்டி விகிதத்தை உயர்த்தி வழங்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள் என  அந்த சுற்றறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.பி.எஃப் தொகைக்கான வட்டி விகிதம் 8.10 சதவீதமாக தற்போது நடைமுறையில் இருந்து வருகிறது.இந்நிலையில் 8.15 சதவீதமாக உயர்த்தப்பட்டு மத்திய அரசு அறிவிப்பு வெளியிட்டுள்ளது

இதையும் பிடிச்சிருந்தா படிச்சு பாருங்க

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

ஆடி மாதத்தில் சுபகாரியங்களை செய்யலாமா? கூடாதா?!

ஆடி மாதத்தில் புதுமணத் தம்பதியரை ஏன் பிரித்து வைக்கிறார்கள் தெரியுமா?

மாங்கல்ய தோஷம் நீங்க ஆடி மாசத்துல இதைச் செய்ய மறக்காதீங்க!