பிலிப்பைன்ஸில் விமானங்கள் நேருக்கு நேர் மோதல்: 4 விமானிகள் பலி
Oct 24, 2026, 20:15 IST
பிலிப்பைன்ஸ் நாட்டின் விமானப்படைக்குச் சொந்தமான இரண்டு SF-260 ரக பயிற்சி விமானங்கள், வெள்ளிக்கிழமை பயிற்சியில் ஈடுபட்டிருந்தபோது விபத்தில் சிக்கின. மணிலாவுக்கு தெற்கே உள்ள படாங்காஸ் மாகாணத்தின் லிபா நகரில் அமைந்துள்ள பெர்னாண்டோ விமானப்படைத் தளத்தில் இந்தச் சம்பவம் நடந்தது.
குறைந்த உயரத்தில் பறந்துகொண்டிருந்தபோது இரண்டு விமானங்களும் வானில் மோதிக்கொண்டதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. பின்னர் விமானங்கள் விமானப்படைத் தள வளாகத்திலேயே விழுந்து நொறுங்கின.
இதில் விமானங்களில் இருந்த நான்கு விமானிகளும் உயிரிழந்தனர். தரையில் இருந்த வேறு யாருக்கும் பாதிப்பு ஏற்படவில்லை.விபத்துக்கான காரணத்தைக் கண்டறிய விசாரணை தொடங்கப்பட்டுள்ளது. முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, SF-260 ரக விமானங்களின் இயக்கத்தை விமானப்படை தற்காலிகமாக நிறுத்தியுள்ளது.
