உலக புகைப்பட தினம் .... புகைப்பட கலைஞர்களை படம் எடுத்த முதல்வர் விஜய்!

 
vijay

 

ஒவ்வொரு ஆண்டும் ஆகஸ்ட் 19-ந்தேதி உலக புகைப்பட தினம் உலகம் முழுவதும் கொண்டாடப்பட்டு வருகிறது. புகைப்படக் கலையின் வரலாறு, அறிவியல் மற்றும் அதன் தாக்கத்தைப் போற்றும் வகையிலும், இக்கலையில் ஈடுபட்டுள்ள கலைஞர்களைக் கௌரவிக்கும் வகையிலும் இந்தத் தினம் கடைப்பிடிக்கப்படுகிறது. பிரான்சின் லூயிஸ் டேகுயர் மற்றும் ஜோசப் நைபோர் ஆகியோர் இணைந்து 'டேகுயரோடைப்' என்ற புகைப்பட முறையைக் கண்டுபிடித்த நாளை அடிப்படையாகக் கொண்டு இத்தினம் அனுசரிக்கப்படுகிறது.

இந்த நிலையில், உலக புகைப்பட தினத்தை முன்னிட்டு முதல்வர் விஜய் புகைப்படக் கலைஞர்களுக்குத் தனது வாழ்த்துகளைத் தெரிவித்திருந்தார். இதனைத் தொடர்ந்து முதல்வர் ச.ஜோசப் விஜய் உலக புகைப்பட நாளை முன்னிட்டுப் பத்திரிகை புகைப்படக் கலைஞர்களைக் காணொளி எடுத்து மகிழ்ந்துள்ளார். இது தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் வேகமாகப் பரவி வருகிறது.

புகைப்படக் கலையின் முக்கியத்துவத்தை உணர்த்தும் வகையில் பல்வேறு ஆன்லைன் கேலரிகள் மற்றும் கண்காட்சிகள் நடத்தப்படுகின்றன. இளம் கலைஞர்களை ஊக்குவிக்கும் விதமாகப் பல அமைப்புகள் சார்பில் போட்டிகளும் நடத்தப்பட்டு வருகின்றன. இந்த நிகழ்வுகள் புகைப்படக் கலைஞர்கள் மத்தியில் மிகுந்த உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளன.