கேரள சேலை அணிந்தபடி எம்.பி.யாக பதவியேற்றார் பிரியங்கா காந்தி!

 
பிரியங்கா காந்தி
 

வயநாடு மக்களவை தொகுதி இடைத்தேர்தலில் வெற்றி பெற்ற காங்கிரஸ் கட்சியின் பிரியங்கா காந்தி, கேரளத்தின் பாரம்பரிய சேலை அணிந்தபடி இன்று காலை மக்களவையில் புதிய எம்.பி.யாக பதவியேற்றுக் கொண்டார். அவருக்கு மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா பதவிப் பிரமாணம் செய்து வைத்தார்.

மக்களவையில் ஒரே நேரத்தில் தற்போது முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தியின் மகன் ராகுல் காந்தியும், மகள் பிரியங்கா காந்தியும் மனைவி சோனியா காந்தியும் எம்.பி.க்களாக உள்ளனர்.

பிரியங்கா

கேரளா வயநாடு மக்களவைத் தொகுதி இடைத்தேர்தலில் போட்டியிட்ட பிரியங்கா காந்தி சுமார் 4,10,931 (4 லட்சத்து 10 ஆயிரத்து 931) வாக்குகள் வித்தியாசத்தில் அமோக வெற்றி பெற்றிருந்தது குறிப்பிடத்தக்கது.

தற்போது நடந்து வரும் பாராளுமன்ற குளிர்கால கூட்டத்தொடரில் பிரியங்கா காந்தி முதலில் எழுப்பும் குரல் காங்கிரஸ் தொண்டர்களிடையே மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

கார்த்திகை ஸ்பெஷல்... சங்காபிஷேகம் விரதமுறை, பலன்கள்!

ஐயப்ப பக்தர்கள் தினசரி சொல்ல வேண்டிய ஸ்லோகம் இது தான்!

ஐயப்பன் பக்தர்கள் தெரிஞ்சிக்கோங்க ... சபரிமலை சுவாரஸ்யங்கள்!

கார்த்திகை மாத சிறப்புகள், பண்டிகைகள் , வழிபாடுகள்... முழு தகவல்கள்!

From around the web