பகீர்... 1,20,000 பச்சைப் பேரோந்தி பல்லிகளை கொல்ல திட்டம்!

 
பச்சை பேரோந்தி


 தைவான் நாட்டில் பச்சை இகுவானா என அழைக்கப்படும் பச்சை பேரேந்தி பல்லிகள் சுமார் 2,00,000க்கும் அதிகமான எண்ணிக்கையில் இருந்து வருகின்றன.  உள்நாட்டில் மேற்கொள்ளப்படும் விவசாயத்தை அதிகமாக சார்ந்துள்ள தீவு நாடான தைவானில், இந்த பச்சைப் பேரோந்திகளின் எண்ணிக்கை அதிகரித்து வருவதால் அந்நாட்டின் விவசாயம் பெரிதும் பாதிக்கப்படுகிறது.  

பச்சை பல்லி
 2024ல்   மட்டும் இதற்காக பணியில் அமர்த்தப்பட்ட சிறப்பு வேட்டைக் குழுவினர் சுமார் 70,000 பச்சைப் பேரோந்திகளை கொன்றனர். கொல்லப்படும் ஒவ்வொரு பேரோந்திக்கும் தலா 15 டாலர்கள் சன்மானமாக வழங்கப்பட்டது.அதே போல் 2025லும்  சுமார் 1,20,000 பேரோந்திகளை கொல்ல திட்டமிடப்பட்டுள்ளது.  அதற்காக  அந்நாட்டின் உள்ளூர் அரசு பொதுமக்களின் உதவியை நாடியுள்ளது. இயற்கையாகவே தைவான் நாட்டில் இந்த பேரேந்திகளை வேட்டையாட எந்தவொரு வேட்டையாடி விலங்கினமும் இல்லை. இதனாலேயே அந்நாட்டில் பச்சை பேரேந்திகளின் எண்ணிக்கை அதிகரிக்க முக்கியக் காரணமாக அமைந்துள்ளது.

தைவான்


கூர்மையான நகங்களையும் பற்களையும் இந்த பச்சைப் பேரோந்திகள் இயற்கையாகவே பெற்றிருந்தாலும் எந்த உயிரினத்தையும் பெரும்பாலும்   தாக்குவது இல்லை. ஆண் பேரோந்திகள் 2 அடி நீளம் வளர்ந்து 20 ஆண்டுகள் வரை உயிர்வாழும் எனக்கூறப்படும் நிலையில் பெண் பேரோந்திகள் ஒரே நேரத்தில் 80 முட்டைகள் இடும். ஆனால்  செல்லப் பிராணிகளாக இந்த பேரோந்திகள் வீட்டில் வளர்க்கபடும்போது பெரும்பாலும் 1 ஆண்டுக்குள் உயிரிழந்து விடுவதாகவும் தெரிகிறது.  மீன்பிடிக்க பயன்படுத்தும் ஈட்டிகளைக் கொண்டு மனிதாபிமான முறையில் இந்த பச்சைப் பேரோந்திகளை வேட்டையாட தைவான் மக்களுக்கு அரசு அறிவுறுத்தியுள்ளது  

2025 புத்தாண்டு இந்த 6 நட்சத்திரத்தில் பிறந்தவங்களுக்கு தான் அதிர்ஷ்ட மழை!

மிஸ் பண்ணாதீங்க... தை மாதத்தின் சிறப்புகள், வழிபாடுகள்!

தை மாத ராசிபலன்கள்... எந்தெந்த ராசிக்காரர்களுக்கு ஏற்றம்?

செல்வத்தை செழிக்கச் செய்யும் தை மாத ஞாயிறு விரதம்!

தை வெள்ளிக்கிழமை... வாழ்க்கையில ஜெயிக்க இதை செய்ய மறக்காதீங்க!

From around the web