நைஜீரியாவில் விழுந்து நொறுங்கிய விமானம் - 32 பேர் பலியான துயரம்!
Oct 6, 2026, 10:30 IST
நைஜீரிய நாட்டில் விமானப் படைக்குச் சொந்தமான விமானம் ஒன்று விபத்துக்குள்ளானதில் அதில் பயணம் செய்த 32 பேரும் உயிரிழந்துள்ளனர்.
நைஜீரிய நாட்டு விமானப் படைக்குச் சொந்தமான ஏடிஆர் 42 ரக விமானம் வழக்கம் போல் இயக்கப்பட்டு வந்த நிலையில், ஒண்டோ மாகாணத்தில் உள்ள இக்போகோடா பகுதியில் திடீரெனக் கட்டுப்பாட்டை இழந்து விழுந்து நொறுங்கியது.
விபத்துக்குள்ளான இந்த விமானத்தில் 25 பயணிகள் மற்றும் 7 விமானப் பணியாளர்கள் (விமானிகள் உள்பட) என மொத்தம் 32 பேர் பயணம் செய்துள்ளனர். இவர்கள் அனைவரும் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்ததாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

விபத்து குறித்த தகவல் அறிந்ததும் ராணுவத்தினரும் மீட்புக் குழுவினரும் உடனடியாக விரைந்து சென்று மீட்பு மற்றும் தேடுதல் பணிகளில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.
