மூட நம்பிக்கை... 10 வருடங்களாகப் பிளாஸ்டிக் கவரைக் கட்டிக்கொண்டிருந்த சீனப் பெண்... வைரல் வீடியோ!

 
நம்பிக்கை நம்பிக்கை

சீனாவின் ஹூபே  மாகாணத்தில், ஒரு விசித்திரமான மூடநம்பிக்கை காரணமாகப் பெண் ஒருவர் கடந்த 10 ஆண்டுகளுக்கும் மேலாகத் தனது வலது கையில் பிளாஸ்டிக் கவரைத் துணியால் சுற்றிக் கட்டியபடி வாழ்ந்து வந்த அதிர்ச்சிச் சம்பவம் தற்பொழுது உலக அளவில் சாமானிய மக்களிடையே மாபெரும் வியப்பையும் விவாதத்தையும் ஏற்படுத்தியுள்ளது. இந்தத் தீவிர மனநலப் பாதிப்பு மற்றும் மூடநம்பிக்கை விவகாரம் குறித்துச் சீன ஊடகங்கள் விரிவான செய்திகளை வெளியிட்டுள்ளன.

சுமார் 10 ஆண்டுகளுக்கு முன்பு அந்தப் பெண்ணிற்குத் தங்களின் குடும்ப வியாபாரத்தில் திடீரென மாபெரும் பொருளாதார நஷ்டம் ஏற்பட்டுள்ளது. இதனால் கடும் மன உளைச்சலுக்கு ஆளான அந்தப் பெண், தனது வலது கையின் மூலமாகவே வீட்டில் உள்ள அனைத்து செல்வங்களும், பணமும் அசுர வேகத்தில் வெளியேறி விடுவதாகத் தீவிரமாக நம்பத் தொடங்கியுள்ளார். இந்த விசித்திரமான எண்ணத்தின் காரணமாக, அன்றில் இருந்து தனது வலது கையைச் சுற்றிலும் ஒரு பிளாஸ்டிக் கவரைப் போட்டு, அதன் மேல் துணிகளை இறுக்கமாகக் கட்டி கையை முழுமையாக மூடி வைத்துள்ளார்.

கடந்த 10 ஆண்டுகளாகக் குளிக்கும் போதும், தூங்கும் போதும் கூட அவர் தனது கையில் இருந்த அந்தப் பிளாஸ்டிக் கவரை ஒருபோதும் அகற்றவே இல்லை எனக் கூறப்படுகிறது. இதனால் அந்தப் பெண்ணின் வலது கை முழுவதும் போதிய சூரிய வெளிச்சம் மற்றும் காற்று படாமல், தசைகள் அனைத்தும் சுருங்கி, கையின் இயல்புத் தன்மை முற்றிலும் முடங்கிப் போனது.சமீபத்தில் அவரது குடும்பத்தினர் போர்க்கால அடிப்படையில் அவரை வலுக்கட்டாயமாக மீட்டு, மனநல மருத்துவமனை ஒன்றில் அவசரச் சிகிச்சைக்கு அனுமதித்தனர். அங்கு அந்தப் பெண்ணிற்குத் தீவிரமான 'அப்செசிவ் கம்பல்சிவ் டிசார்டர்' (OCD) எனப்படும் தொடர் சுழற்சி மனநலப் பாதிப்பு இருப்பது மருத்துவர்களால் தற்பொழுது கண்டறியப்பட்டுள்ளது. தற்பொழுது மனநல மருத்துவர்கள் மற்றும் உளவியல் நிபுணர்களின் தொடர் தீவிர ஆலோசனைகள் மற்றும் மருத்துவச் சிகிச்சைகளுக்குப் பிறகு, அந்தப் பெண் 10 ஆண்டுகளுக்குப் பின் முதன்முறையாகத் தனது கையில் இருந்த பிளாஸ்டிக் கவரைக் கழற்றச் சம்மதித்துள்ளதாக மருத்துவர்கள் நிம்மதியுடன் தெரிவித்துள்ளனர்.