‘அலையோடு விளையாடு’.. தீவிர சர்ஃபிங் பயிற்சியில் இன்பன் உதயநிதி - சாகச வீடியோ!

 
இன்பன் உதயநிதி

தமிழ்நாடு சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலினின் மகன் இன்பன் உதயநிதி, நடுக்கடலில் தீவிரமாகச் சர்ஃபிங் பயிற்சியில் ஈடுபடும் வீடியோ காட்சிகள் இணையத்தில் வெளியாகிப் பெரும் வைரலாகி வருகின்றன.

கடல் அலைகளின் சீற்றத்திற்கு இடையே மிகுந்த தன்னம்பிக்கையுடனும், சரியான உடல் சமநிலையுடனும் இன்பன் உதயநிதி சர்ஃபிங் போர்டில் பயணிக்கும் காட்சிகள் இதில் இடம் பெற்றுள்ளன. இன்பன் உதயநிதியின் இந்தச் சாகசப் பயிற்சி வீடியோ விளையாட்டுப் பிரியர்கள் மற்றும் இணையவாசிகளின் கவனத்தை வெகுவாக ஈர்த்துள்ளது.

இன்பன் உதயநிதி

அவரது துணிச்சலையும் விளையாட்டு ஆர்வத்தையும் பாராட்டி, ரசிகர்கள் மற்றும் நெட்டிசன்கள் இந்த வீடியோவைச் சமூக வலைதளங்களில் அதிகளவில் பகிர்ந்து வருகின்றனர்.