ஆசனவாயில் காற்று அடித்து விளையாடியதால் விபரீதம்.. வயிறு வீங்கி பரிதாபமாக பலியான இளைஞர்!

 
யோகேஷ்

கர்நாடக மாநிலம் விஜயபுரா மாவட்டத்தைச் சேர்ந்தவர் யோகேஷ், 28. பெங்களூரில் வசிக்கும் இவர் டெலிவரி ஏஜென்டாக வேலை பார்த்து வருகிறார். யோகேஷ் தனது இரு சக்கர வாகனத்தை சர்வீஸ் செய்வதற்காக பெங்களூருவில் உள்ள சம்பிகேஹள்ளி பகுதியில் உள்ள தனியார் பைக் சர்வீஸ் சென்டரில் சர்வீஸ் செய்ய பைக்கை விட்டார். அந்த சர்வீஸ் சென்டரில் யோகேஷின் நண்பன் முரளி என்ற வாலிபர் வேலை பார்த்து வந்துள்ளார்.

இந்நிலையில் நண்பர்கள் இருவரும் குறும்புத்தனமாக விளையாடி உள்ளனர். பின்னர் இருவரும் சர்வீஸ் சென்டரில் இருந்த "ஏர் பிரஷர் பைப்பை" எடுத்து விளையாட ஆரம்பித்தனர். இதில் முரளி "ஏர் பைப்" பயன்படுத்தி முதலில் யோகேஷ் முகம் மற்றும் வயிற்றில் காற்றை வைத்து விளையாட, யோகேஷ் ஒரு கட்டத்தில் "ஏர் பிரஷர் பைப்" மூலம் ஆசனவாயில் காற்றை பிடித்துள்ளார். இதில், ஆசன வாய் வழியாக காற்று உள்ளே நுழைந்து, யோகேஷின் வயிறு பெரிதாகி, குடல் வெடித்து, தடுமாறி கீழே விழுந்தார்.

இதையடுத்து, ஆபத்தான நிலையில் இருந்த யோகேஷை மீட்டு அருகில் உள்ள மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் யோகேஷ் பரிதாபமாக இறந்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து முரளியை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.  விளையாட்டாக நடந்த இந்த சம்பவம் சோகமாக மாறி வாலிபர் உயிரிழந்தது அப்பகுதி முழுவதும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

பங்குனி உத்திரத்தின் மகத்துவம் தெரிஞ்சுக்கோங்க..!

பங்குனி மாத பண்டிகைகள், விசேஷ நாட்கள்.... முழு பட்டியல்!

திடீர் ராஜ யோகத்தால் பணமழை கொட்ட போகும் 6 ராசிக்காரர்கள்

From around the web