10ம் வகுப்பு தேர்வு தேதிய மாத்துங்க... பள்ளிக்கல்வித்துறைக்கு கோரிக்கை!!

 
அன்பில் மகேஷ் மாணவர்கள்

10, 11, 12 ஆம் வகுப்பு களுக்கான பொது தேர்வு அட்டவணையை பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யா  மொழி இன்று வெளியிட்டார்.  பத்தாம் வகுப்புக்கு மார்ச் 26 ஆம் தேதி முதல் ஏப்ரல் 8ம் தேதி வரை பொது தேர்வு நடைபெறுகிறது. அதேபோல 11ம் வகுப்புக்கு மார்ச் 4-ம் தேதி தொடங்கும் பொது தேர்வானது மார்ச் 25ஆம் தேதி வரை நடைபெறுகிறது.  12ஆம் வகுப்புக்கு மார்ச் 1ம் தேதியே பொது தேர்வு தொடங்கும் நிலையில் 22 ஆம் தேதி வரை நீடிக்கிறது.

பள்ளிக்கல்வித்துறை தேர்வு

குறிப்பாக பத்தாம் வகுப்பு மொழிப்பாடங்கள் 26.03.24 ஆம் தேதி மொழி பாடமும், 28.03.24 ஆம் தேதி ஆங்கிலமும், 01.04.24 ஆம் தேதி கணிதமும், 04.04.24 அன்று அறிவியலும், 06.04.24 அன்று விருப்ப மொழித் தேர்வும், 08.04.24 அன்று சமூக அறிவியல் தேர்வும் நடைபெறம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

தேர்வு

இந்நிலையில் ஏப்ரல் ஒன்றாம் தேதி நடைபெற உள்ள 10-ஆம் வகுப்பு கணிதத் தேர்வை வேறு தேதிக்கு மாற்ற பட்டதாரி ஆசிரியர் கூட்டமைப்பு கோரிக்கை விடுத்துள்ளனர். முந்தைய நாட்களில் புனித வெள்ளி, ஈஸ்டர் திருநாள் வருவதால், தேர்வு தேதியை மாற்றி பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் உத்தரவிட வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்துள்ளனர்.

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

பாதாள அறையில் சாய்பாபா! ஷீரடி போகும் போது இதை மிஸ் பண்ணாதீங்க!

வாழ்வில் செல்வமும், அதிர்ஷ்டமும் கிடைக்க இதை மறக்காதீங்க!

சபரிமலைக்குச் செல்பவர்கள் தினந்தோறும் சொல்ல வேண்டிய ஐயப்பன் ஸ்லோகம்!

From around the web