என்னை கருணைக்கொலை செய்ங்க.... மூதாட்டி பரபரப்பு மனு!!

 
பாவாத்தா

பிள்ளைகளை பார்த்து பார்த்து ஒரு காலகட்டம் வரை பெற்றோர் வளர்க்கின்றனர். வளர்த்து சுயமாக சம்பாதிக்க தொடங்கிய பிறகு பெற்றோரை பராமரிப்பது எல்லாம் சென்ற தலைமுறையுடன் முடிந்துவிட்டது . இந்த காலத்தில் பிள்ளைகள் தான், தன்னுடைய குடும்பம் என சுயநலமாக யோசித்து வருகின்றனர். இதனால் பெற்றோர்கள் நிர்க்கதியாக நிற்கின்றனர்.  அதே போல் ஒரு சம்பவம் ஈரோட்டில் நடைபெற்று பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஈரோடு மாவட்டம் கொடுமுடி வேதம்பாளையம் பாப்பங்காட்டு தோட்ட பகுதியில் வசித்து வருபவர்   பெரியசாமி . இவருடைய மனைவி பாவாத்தாள் . இவர்  ஈரோடு கலெக்டர் அலுவலகத்தில்  நேற்று மனு ஒன்றை அளித்தார்.

பாவாத்தா


அந்த மனுவில்   ”எனது கணவர் 2011ல்  இறந்துவிட்டார். எனது மகள் அவரது கணவருடன் ஈரோட்டில் வசித்து வருகிறார். மகன், மருமகள் பராமரிப்பில் இருந்து வருகிறேன். எனது கணவருக்குச் சொந்தமான சொத்துக்களை மருமகள் தான் பார்த்துக் கொண்டார்.என் மகனுக்கும் செலவுக்கு பணம் கொடுக்காமல் வீட்டை விட்டு வெளியேற்றி விட்டார். மருமகளும், அவரது அண்ணன், மற்றொரு நபர் என 3 பேரும் சேர்ந்து என்னைத் தாக்கி  சொத்து பத்திரத்தில் கையெழுத்து போடச் சொல்லி மிரட்டல் விடுத்தனர். கையெழுத்து போடவில்லை எனில்   கிணற்றில் குதிக்கச் சொல்லிக் கட்டாயப்படுத்துகின்றனர்.

ஈரோடு
தினம் தினம் நடக்கும் இவ்விதமான கொடுமைகளால்  உணவு கிடைக்காமல் தவித்து வருகிறேன். எனவே, என்னைக் கருணைக் கொலை செய்து விடுங்கள் அல்லது நான் தற்கொலை செய்து கொள்ள அனுமதி தாருங்கள்” என அதில்  குறிப்பிட்டிருந்தார். இந்த மனுவால் ஈரோடு ஆட்சியர் அலுவலகத்தில் பரபரப்பு ஏற்பட்டது. இச்சம்பவம்  குறித்து விரிவான விசாரணை நடத்தி உடனடியாக நடவடிக்கை எடுக்கும்படி காவல்துறைக்கு கலெக்டர் அறிவுறுத்தியுள்ளனர்.  

From around the web