ப்ளீஸ்... விட்டுடுங்க... தவறான தகவல்களை பரப்பாதீங்க... மருத்துவ கண்காணிப்பில் நடிகர் ஸ்ரீ!

 
 நடிகர் ஸ்ரீ

பிரபல நடிகர் ஸ்ரீ தற்போது மருத்துவர்கள் கண்காணிப்பில் இருப்பதாக அவரது குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர். அதே நேரத்தில் ஸ்ரீ குறித்து  தவறான தகவல்களை பரப்ப வேண்டாம் என குடும்பத்தினர் வேண்டுகோள் விடுத்துள்ளனர். 

 நடிகர் ஸ்ரீ
இது குறித்து  நடிகர் ஸ்ரீ-யின் குடும்பத்தினர் வெளியிட்டுள்ள அறிக்கையில்,”  நடிகர் ஸ்ரீ தற்போது மருத்துவர்கள் கண்காணிப்பில் உள்ளார். அவர் குறித்து தவறான தகவல்களை பரப்ப வேண்டாம். தற்போது மருத்துவ கண்காணிப்பில் உள்ளதால் சமூக வலைதளங்களில்  இருந்து விலகி இருக்கிறார். நடிகர் ஸ்ரீ குறித்த  தவறான தகவல்களை பரப்புவதை தனி நபர்களும் ஊடகங்களும் நிறுத்த வேண்டும். ஸ்ரீ நலமுடன் இருப்பதாக அவரது நலம் விரும்பிகள், நண்பர்கள் மற்றும் ஊடகவியலாளர்களுக்கு இதன் மூலம்  தெரிவித்துக்கொள்கிறோம். 

 நடிகர் ஸ்ரீ
அவரது தனியுரிமையை  ரசிகர்கள் பொதுமக்கள் உட்பட அனைவரும் மதிக்குமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம். சில ஊடகங்களில் ஸ்ரீ குறித்த நேர்காணல்களில் வெளிப்படுத்தும் எந்தவொரு கருத்தையும் நாங்கள் ஆதரிக்கவில்லை. இந்த நேரத்தில் உங்கள் தொடர்ச்சியான அன்பு, ஆதரவு மற்றும் புரிதலுக்கு நன்றி” எனக் கூறியுள்ளனர்.

2025 புத்தாண்டு இந்த 6 நட்சத்திரத்தில் பிறந்தவங்களுக்கு தான் அதிர்ஷ்ட மழை!

மிஸ் பண்ணாதீங்க... தை மாதத்தின் சிறப்புகள், வழிபாடுகள்!

தை மாத ராசிபலன்கள்... எந்தெந்த ராசிக்காரர்களுக்கு ஏற்றம்?

செல்வத்தை செழிக்கச் செய்யும் தை மாத ஞாயிறு விரதம்!

தை வெள்ளிக்கிழமை... வாழ்க்கையில ஜெயிக்க இதை செய்ய மறக்காதீங்க!

From around the web