அப்டேட் பண்ணுங்க... வாட்ஸ்அப்பில் புதிய வசதி - ஸ்டேட்டஸ் வைத்த பிறகும் 'கேப்ஷன்' திருத்தலாம்!
Aug 2, 2026, 11:35 IST
இந்தியாவில் 50 கோடிக்கும் அதிகமான பயனர்களைக் கொண்டுள்ள முன்னணி குறுஞ்செய்திச் செயலியான வாட்ஸ்அப், பயனர்களின் வசதிக்காகத் தொடர்ந்து பல புதிய அம்சங்களை அறிமுகப்படுத்தி வருகிறது. அந்த வகையில், தற்போது ஆண்ட்ராய்டு பீட்டா பதிப்பில் ஒரு புதிய வசதியைச் சோதித்து வருகிறது.
வாட்ஸ்அப்பில் புகைப்படம் அல்லது வீடியோக்களை ஸ்டேட்டஸாகப் பதிவிட்ட பிறகு, அதில் குறிப்பிடப்பட்டுள்ள 'கேப்ஷன்' வரிகளில் ஏதேனும் எழுத்துப் பிழைகள் இருந்தால், அதனை 15 நிமிடங்களுக்குள் திருத்திக்கொள்ளலாம்.

முன்பெல்லாம் கேப்ஷனில் தவறு நேர்ந்தால், வைத்த ஸ்டேட்டஸை முற்றிலும் நீக்கிவிட்டு மீண்டும் முதல்லிருந்து பதிவேற்ற வேண்டிய சூழல் இருந்தது. இனி அந்தச் சிரமம் இருக்காது. தற்போது சோதனை முறையில் உள்ள இந்த புதிய அம்சம், விரைவில் அனைத்து பயனர்களின் பயன்பாட்டிற்கும் அதிகாரப்பூர்வமாக வரவுள்ளது.
