சட்டப்பேரவை நிகழ்வுகளை நேரில் பார்வையிட வந்த இன்பநிதி!
காவல்துறை மற்றும் தீயணைப்புத் துறை மீதான மானிய கோரிக்கை விவாதத்தில் எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் உரையாற்ற உள்ள நிலையில், அவரது மகன் இன்பநிதி சட்டப்பேரவை நிகழ்வுகளை நேரில் பார்வையிட வருகை தந்துள்ளது அரசியல் அரங்கில் கவனம் பெற்றுள்ளது.
எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் சட்டமன்றத்தில் உரையாற்றவிருக்கும் முக்கிய நிகழ்வைக் காண்பதற்காக அவரது மகன் இன்பநிதி தலைமைச் செயலகத்திற்கு வருகை தந்தார்.
வழக்கமான விசேட பார்வையாளர் மாடங்களில் அமர்வதற்குப் பதிலாக, இன்று பொதுமக்களுடன் பொதுவான பகுதியில் அமர்ந்து பேரவை நிகழ்வுகளை அவர் ஆர்வமுடன் கண்டுகளித்தார்.
முதலமைச்சர் விஜய் உயர்நீதிமன்றத்தில் தமிழை முதன்மை மொழியாக்கும் தனித்தீர்மானத்தைக் கொண்டுவந்த இந்தச் சமயத்தில், ஆளுங்கட்சி மற்றும் எதிர்க்கட்சி உறுப்பினர்களின் விவாதங்களையும் செயல்பாடுகளையும் இன்பநிதி நேரில் பார்வையிட்டது குறிப்பிடத்தக்கது.
