பிளஸ்-2 தேர்வு முடிவுகள் தயார்... அரசு ஒப்புதலுக்காகக் காத்திருப்பு!

 
தேர்வு முடிவுகள் பொதுத்தேர்வு தேர்வு முடிவுகள் பொதுத்தேர்வு

தமிழகத்தில் பிளஸ்-2 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியாவதில் தற்போது சிக்கல் ஏற்பட்டுள்ளது. கடந்த மார்ச் 2 முதல் 26 வரை நடைபெற்ற இந்தத் தேர்வை மாநிலம் முழுவதும் சுமார் 8 லட்சம் மாணவ-மாணவிகள் எழுதியிருந்தனர். இதற்கான விடைத்தாள் மதிப்பீட்டுப் பணிகள் அனைத்தும் ஏப்ரல் 20-ம் தேதியுடன் முழுமையாக முடிவடைந்து, மாணவர்களின் மதிப்பெண்கள் அனைத்தும் இணையதளத்தில் பதிவேற்றம் செய்யப்பட்டுத் தயார் நிலையில் உள்ளன.

தேர்வு தாள்கள் திருத்தும் பணி

இருப்பினும், தமிழகத்தில் தற்போது ஏற்பட்டுள்ள அரசியல் சூழல் மற்றும் ஆட்சி மாற்றம் காரணமாகத் தேர்வு முடிவுகளை வெளியிடுவதில் தாமதம் ஏற்பட்டுள்ளது. வழக்கமாகத் தேர்வு முடிவுகளை வெளியிட அரசின் முறையான ஒப்புதல் தேவைப்படும் என்பதால், திட்டமிட்டபடி மே 8-ம் தேதி முடிவுகள் வெளியாகாது எனத் தெரிகிறது. இதனால் தேர்வு முடிவுகளை எதிர்நோக்கி ஆவலுடன் காத்திருந்த லட்சக்கணக்கான மாணவர்கள் மற்றும் பெற்றோர்கள் ஏமாற்றமடைந்துள்ளனர்.

தேர்வு முடிவுகள் மாணவிகள் ரிசல்ட் சிபிஎஸ்இ ஸ்கூல் படிப்பு

தற்போது புதிய அரசு பதவியேற்க உள்ள நிலையில், முதலமைச்சர் மற்றும் கல்வி அமைச்சரின் முறையான ஒப்புதலைப் பெற்ற பின்னரே தேர்வு முடிவுகள் அதிகாரப்பூர்வமாக வெளியிடப்படும் எனத் தேர்வுத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். புதிய அரசு அமைந்தவுடன் இதற்கான நடவடிக்கைகள் போர்க்கால அடிப்படையில் எடுக்கப்படும் என்றும், அதன் பிறகு முடிவுகள் வெளியாகும் தேதி அறிவிக்கப்படும் என்றும் கல்வித்துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.