நாளை பிளஸ்-2 பொதுத்தேர்வு.. மாணவர்களுக்கு முதலமைச்சர் ஸ்டாலின் வெளியிட்ட முக்கிய செய்தி !!

 
பொதுத்தேர்வு

தமிழகத்தில் 12ஆம் வகுப்பு மாணவர்களுக்கான பொதுத்தேர்வு நாளை (மார்ச் 13) தொடங்குகிறது. வரும் ஏப்ரல் 5ஆம் தேதி வரை தேர்வுகள் நடக்கவுள்ளன. பொதுத்தேர்வுக்கு மாணவ, மாணவிகள் தயாராகி வருகின்றனர். தமிழகம் மற்றும் புதுச்சேரியில், 3 ஆயிரத்து 225 மையங்களில் மொத்தம் 8.75 லட்சம் மாணவர்கள் எழுத உள்ளனர்.

இந்நிலையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வீடியோ வெளியிட்டு மாணவர்களுக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார். அவர் வெளியிட்டுள்ள வீடியோவில், அன்பிற்குரிய 10, 11 மற்றும் 12ஆம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதவுள்ள மாணவ, மாணவிகளே... அனைவருக்கும் என் அன்பு வணக்கம். 


என்ன பரீட்சை டென்ஷனில் இருக்கீங்களா? ஒரு டென்ஷனும் வேணாம். எந்த பயமும் வேண்டாம். இது ஜஸ்ட் இன்னொரு பரீட்சை. அவ்வளவு தான். அப்படித்தான் இதை நீங்கள் அணுகணும். எந்த கேள்வியாக இருந்தாலும் நீங்க படிக்கிற புத்தகத்தில் இருந்து தான் வரப் போகுது. அதனால உறுதியோட அப்ரோச் பண்ணுங்க. 

உங்களுக்கு தேவையானது எல்லாம் தன்னம்பிக்கையும், உறுதியும் தான். அது இருந்தாலே நீங்க பாதி ஜெயிச்சிட்டீங்க. தேர்வுன்றது உங்களை பரிசோதிக்கிறது அல்ல. உங்களை அடுத்தகட்டத்துக்கு எடுத்துட்டு போறது. உயர்த்தி விடுறது. அதனால் மீண்டும் சொல்றேன். எந்தவிதமான தயக்கமும் இல்லாம தேர்வுகளை எதிர்கொள்ளுங்க. 

பொதுத்தேர்வு

தேர்வை பாத்து பயம் வேண்டாம். பாடங்களை ஆழ்ந்து படிங்க. புரிஞ்சு படிங்க. விடைகளை தெளிவாக முழுமையாக எழுதுங்க. நிச்சயமா வெற்றி பெறுவீங்க. அந்த வெற்றிக்காக உங்கள் பெற்றோர்கள், ஆசிரியர்கள் போல நானும் காத்திருக்கேன். முதல்வரா மட்டுமில்ல. உங்க குடும்பத்துல ஒருத்தரா வாழ்த்துறேன். All The Best.., என்று குறிப்பிட்டுள்ளார்.

From around the web