தமிழகத்தில் பிளஸ் 2 பொதுத்தேர்வு முறைகேடு... 4 பள்ளிகளின் தேர்வு மைய அங்கீகாரம் ரத்து!

 
தேர்வு முடிவுகள் மாணவிகள் ரிசல்ட் சிபிஎஸ்இ ஸ்கூல் படிப்பு

பிளஸ் 2 பொதுத்தேர்வுப் பணிகளில் முறைகேடு நடைபெற்றதாக எழுந்த புகாரைத் தொடர்ந்து, கடலூர் மாவட்டத்தில் உள்ள 4 பள்ளிகளின் தேர்வு மைய அங்கீகாரத்தை ரத்து செய்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளார்.

கொள்ளுகாரன் குட்டை வள்ளலார் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி, காட்டுமன்னார்கோவில் ஜி.கே. மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி, கலைமகள் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி மற்றும் சேத்தியாத்தோப்பு டி.ஜி.எம். மேல்நிலைப்பள்ளி ஆகிய நான்கு பள்ளிகளில் முறைகேடு நடந்திருப்பது விசாரணையில் உறுதி செய்யப்பட்டுள்ளது.

க்ட்க்

இதனைத் தொடர்ந்து, இந்தப் பள்ளிகளில் பொதுத்தேர்வு மையங்களை நடத்துவதற்கான அனுமதியை உடனடியாக ரத்து செய்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் உத்தரவிட்டுள்ளார். இந்தப் பள்ளிகளில் பயிலும் மாணவர்கள், வரும் மார்ச் மாதம் நடைபெறவுள்ள பிளஸ் 2 பொதுத்தேர்வை எழுதுவதில் எந்தவிதப் பாதிப்பும் ஏற்படாது எனக் கல்வித்துறை தெரிவித்துள்ளது.

தேர்வு முடிவுகள் பொதுத்தேர்வு

சம்பந்தப்பட்ட மாணவர்கள் தங்களுக்கு ஒதுக்கப்பட்ட மாற்றுத் தேர்வு மையங்களில் சென்று பொதுத்தேர்வை எழுத அனுமதிக்கப்படுவார்கள் எனவும் கல்வித்துறை அதிகாரிகள் தகவல் தெரிவித்துள்ளனர்.