அக்டோபர் 30-ல் விவசாயிகளுக்கு ரூ.2,000... பிஎம் கிசான் 24-வது தவணை அறிவிப்பு!

 
விவசாயி

 

பிரதமரின் பிஎம் கிசான் சம்மான் நிதி திட்டத்தின் 24-வது தவணை வரும் அக்டோபர் 30, 2026 அன்று விடுவிக்கப்பட உள்ளது. இதன் மூலம் நாடு முழுவதும் உள்ள சுமார் 9.34 கோடி பயனாளி விவசாயிகளுக்கு தலா ரூ.2,000 வழங்கப்பட உள்ளது. இதற்காக மொத்தம் ரூ.18,680 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

மேட்டூர் டெல்டா ஏக்கர் குறுவை நெல் சாகுபடி விவசாயம் விவசாயி

e-KYC கட்டாயம்: விவசாயிகள் கவனத்திற்கு!

இந்தத் திட்டத்தின் கீழ் தகுதியுள்ள விவசாயக் குடும்பங்களுக்கு ஆண்டுக்கு ரூ.6,000 மூன்று தவணைகளாக வழங்கப்படுகிறது. நிதி நேரடியாக வங்கிக் கணக்கில் வரவு வைக்கப்படும். அடுத்த தவணையைப் பெறுவதற்கு e-KYC சரிபார்ப்பை முடித்திருப்பது அவசியம்.

e-KYC முடிக்காதவர்கள் அதிகாரப்பூர்வ பிஎம் கிசான் இணையதளம் அல்லது செயலி வாயிலாகவும், அருகிலுள்ள பொது சேவை மையம் (CSC) மூலமாகவும் சரிபார்ப்பை நிறைவு செய்யலாம்.

மின் இணைப்பு விவசாயி மோட்டார் பம்புசெட்

பணம் வருமா? எப்படி சரிபார்ப்பது?

விவசாயிகள் pmkisan.gov.in இணையதளத்தில் உள்ள “Know Your Status” வசதி மூலம் தங்களின் பயனாளர் நிலை மற்றும் தவணை விவரங்களைச் சரிபார்க்கலாம். e-KYC, ஆதார் இணைக்கப்பட்ட வங்கிக் கணக்கு, நிலப் பதிவுகள் உள்ளிட்ட விவரங்களில் குறைபாடுகள் இருந்தால் பணம் வருவதில் தாமதம் ஏற்படலாம். எனவே, விவசாயிகள் தங்களின் விவரங்களை முன்கூட்டியே சரிபார்த்துக் கொள்வது நல்லது