திருச்சூர் வெடிவிபத்தில் 14 பேர் பலி - ரூ.2 லட்சம் நிவாரணம் அறிவித்தார் பிரதமர் மோடி!

 
கோடி நிவாரணம் கோடி நிவாரணம்

கேரள மாநிலம் திருச்சூர் அருகே பட்டாசு ஆலை வெடி விபத்தில் சிக்கி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 14-ஆக உயர்ந்துள்ளது. புகழ்பெற்ற திருச்சூர் பூரம் திருவிழா வரும் ஏப்ரல் 26-ஆம் தேதி நடைபெறவுள்ள நிலையில், அதற்காகப் பட்டாசுகள் தயாரிக்கும் பணியில் தொழிலாளர்கள் தீவிரமாக ஈடுபட்டிருந்தபோது இந்த கோர விபத்து நிகழ்ந்துள்ளது. இந்தச் சம்பவம் ஒட்டுமொத்த கேரளாவையும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.

இந்த விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்குப் பிரதமர் நரேந்திர மோடி தனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துள்ளார். மேலும், உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்குத் தலா ரூ.2 லட்சம் மற்றும் காயமடைந்தவர்களுக்குத் தலா ரூ.50,000 பிரதமர் தேசிய நிவாரண நிதியிலிருந்து வழங்கப்படும் என அவர் அறிவித்துள்ளார். குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு அவர்களும் இந்தச் சம்பவத்திற்குத் தனது வருத்தத்தைப் பதிவு செய்துள்ளார்.

கோடி நிவாரணம்

நேற்று மாலை முண்டத்திக்கோடு பகுதியில் உள்ள ஆலையில் ஏற்பட்ட இந்த விபத்தைத் தொடர்ந்து, அங்குள்ள வெடிபொருட்கள் அடுத்தடுத்து வெடித்துக் கொண்டே இருந்ததால் தீயணைப்பு வீரர்களால் உடனடியாக உள்ளே நுழைய முடியவில்லை. இதனால் மீட்புப் பணியில் தொய்வு ஏற்பட்டது. பின்னர், அதீத தொழில்நுட்பம் கொண்ட ட்ரோன்கள் (Drones) மூலம் இடிபாடுகளுக்குள் சிக்கியிருப்பவர்களைக் கண்டறியும் பணிகள் துரிதப்படுத்தப்பட்டன. தற்போது வரை மீட்கப்பட்ட 40-க்கும் மேற்பட்டோர் திருச்சூர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். அவர்களில் 5 பேரின் நிலைமை கவலைக்கிடமாக இருப்பதாகக் கூறப்படுகிறது.

கோடி நிவாரணம்

கேரள முதல்வர் பினராயி விஜயன் அனைத்துத் துறையினரையும் ஒருங்கிணைத்து மீட்புப் பணிகளை வேகப்படுத்த உத்தரவிட்டுள்ளார். மாவட்ட ஆட்சியர் ஷிகா சுரேந்திரன் இந்த விபத்து குறித்து விரிவான மாஜிஸ்திரேட் விசாரணைக்கு உத்தரவிட்டுள்ளார். பாதுகாப்பு விதிமுறைகள் முறையாகப் பின்பற்றப்பட்டதா? அல்லது விதிமுறை மீறல்கள் ஏதேனும் நடந்ததா? என்பது குறித்து வருவாய் கோட்டாட்சியர் தலைமையில் விசாரணை தொடங்கப்பட்டுள்ளது.