தமிழகத்தின் வளர்ச்சிக்கு மத்திய அரசு முழு ஒத்துழைப்பு வழங்கும் - பிரதமர் மோடி

 
மோடி

சென்னை ஐஐடி வளாகத்தில் நடைபெற்ற விழாவில் ரூ.13,000 கோடி மதிப்பிலான வளர்ச்சித் திட்டங்களைத் தொடங்கி வைத்துப் பேசிய பிரதமர் நரேந்திர மோடி, வளர்ந்த தமிழ்நாட்டின் பங்களிப்புடன் வளமான பாரதம் உருவாக்கப்படும் என உறுதியளித்தார்.

தமிழகத்தில் தொடங்கப்பட்டுள்ள இந்த புதிய உள்கட்டமைப்புத் திட்டங்கள் மாநிலத்தின் வளர்ச்சியை மேலும் துரிதப்படுத்தும் என்று அவர் தெரிவித்தார்.

மோடி விஜய் விஜய்மோடி

நாட்டின் ஒட்டுமொத்த வளர்ச்சியில் தமிழகத்தின் பங்கு மிகவும் முக்கியமானது என்றும், தமிழகத்தின் முன்னேற்றத்திற்குத் தேவையான அனைத்து உதவிகளையும் மத்திய அரசு தொடர்ந்து வழங்கும் என்றும் அவர் மீண்டும் உறுதிப்படுத்தினார்.