அடுத்த 5 வருஷத்துல இந்தியாவில் செழிப்பும், வளர்ச்சியும் இருக்கும்... ரைசிங் பாரத் உச்சிமாநாட்டில் பிரதமர் மோடி பேச்சு!

 
மோடி

 புது தில்லியில் நடைபெற்ற ரைசிங் பாரத் உச்சி மாநாட்டில் பிரதமர் மோடி உரை நிகழ்த்தினார். இந்தியாவில் 7 கட்டங்களாக மக்களவை தேர்தல் தேதிகள் அறிவிக்கப்பட்டுள்ளன. இந்தியா முழுவதும் தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலில் உள்ளன. அரசியல் கட்சிகள் அனல் பறக்கும் பிரச்சாரங்களில் ஈடுபட்டு வருகின்றன. தேர்தல் வாக்குறுதிகளை அள்ளி வீசுகின்றன.

அந்த வகையில் பிரதமர்  மோடி இந்தியாவில் அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியர்களுக்கு "முன்னோடியில்லாத மாற்றம், வளர்ச்சி மற்றும் செழிப்பு"  இவையே தாரக மந்திரம் எனக் கூறியுள்ளார்.  தேர்தல் வாக்குறுதிகளில் பெண்கள், நடுத்தர வர்க்கத்தினர்  மற்றும் இளைஞர்களை குறிவைத்து பேசியுள்ளார்.  
"கடந்த 10 ஆண்டுகளில் அரசு மேற்கொண்டுள்ள முன்னேற்றங்களை மக்கள் அனைவரும் அனுபவித்து வருகின்றன.உலக அளவில் இந்தியா சாதனை படைத்துள்ளது. “ உலகின் பொருளாதார அளவில் 5 வது இடத்தில் இந்தியா இருந்து வருகிறது.   

மோடி
"எழுச்சியடையும் பாரதத்தின் அடித்தளத்தை" வலுப்படுத்தும் என்று அவர் கூறிய "தேசத்தை முதலில்" என்பதே குறிக்கோளாக இருக்கும்.  " இந்தியாவில் 140 கோடி மக்களும் அவரவர் பணிகளை  தேசத்துடன் இணைக்கும் நாள்... தேசம் என்ற விதை உங்களில் முளைத்த நாள்தான்" எனக் கூறியுள்ளார்.  
பிரதமர் மோடியின் உரையின் முக்கிய அம்சங்கள்  :
 
தேர்தலை முன்னிட்டு விவாதம் நடக்கும் சூழல் நிலவுகிறது, அதுவே ஜனநாயகத்தின் அழகு  பாஜக தலைமையிலான மத்திய அரசு அடுத்த 25 ஆண்டுகளுக்கான வளர்ச்சியை முன்னெடுத்து நடைமுறைப்படுத்தி வருகிறது. தனது 3 வது பதவி காலத்தின் முதல் 100 நாட்கள் வரலாற்று சாதனை படைக்க உள்ளது.இதற்கான திட்டங்கள் தயார் நிலையில் உள்ளன.  2014க்கு முன் "அரசியல் புறக்கணிப்பை" எதிர்கொண்ட நடுத்தர வர்க்கத்தினரின் வாழ்க்கை கடந்த 10  ஆண்டுகளில் மாற்றம் அடைந்துள்ளது  . வரிவிதிப்பு, குழந்தைகளின் கல்வி மற்றும் கடன்கள் ஆகியவற்றின் சுமைகளில் சிக்கித் தவிக்கும் சமூகத்தின் பிரிவினருக்கு ஏராளமான பிரச்சினைகள் உள்ளன.  

பிரதமர் மோடி


"நடுத்தர வர்க்கத்தினருக்கு வீடு கட்டும் கனவை நனவாக்கியது பாஜக அரசு தான். இதற்காக ரூ25000 கோடி செலவிடப்பட்டுள்ளது.  நடுத்தரக் குடும்பங்கள் முன்பு தங்கள் குழந்தைகளின் வெளிநாட்டுக் கல்விக்காக கோடிக்கணக்கில் செலவழிக்கும். இப்போது வெளிநாட்டு நிறுவனங்கள் இந்தியாவை தேடி வரத் தொடங்கியுள்ளன” எனத் தெரிவித்துள்ளார்.  புதிய இந்தியா பயங்கரவாதத்தை பொறுத்துக்கொள்ளாது  . இனி அமைய உள்ள இந்தப் புதிய பாரதம் பயங்கரவாதத்தைத் தாங்காது, மாறாக, அது குற்றவாளிகளுக்கு கடுமையான தண்டணைகளை உடனடியாக அமல்படுத்தும் .  கடந்த 10 ஆண்டுகளில் 25 கோடி பேர் வறுமையில் இருந்து மீண்டுள்ளனர்.  நாட்டின் அந்நிய செலாவணி கையிருப்பு 700 பில்லியன் டாலருக்கும் அதிகமாக உள்ளது  .பாஜக தலைமையிலான அரசு அரசு அலுவலகங்களை சேவை மையங்களாக மாற்றியுள்ளது  என பிரதமர் கூறியுள்ளார்.  "இன்று அரசாங்கங்களின் டெண்டர்கள் வெளிப்படையானவை.

2ஜி நேரத்தில் 5ஜி வந்திருந்தால் இந்தியாவின் நிலைமை என்ன என எதிர்க்கட்சியை பார்த்து கேள்வி எழுப்பியுள்ளார்.  இந்தியா முழுவதும் 100000 எம்பிபிஎஸ் இடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளன. ஊழலுக்கு எதிரான தனது அரசின் நடவடிக்கையால், கருப்புப் பணத்தை யாரும் மறைத்து வைக்க முடியாது.  2014 முன் ஊழல் தலைவிரித்து ஆடியது. தற்போது ஊழலுக்கு எதிரான கடுமையான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.  அதே போல் 10 ஆண்டுகளில் இந்தியா முழுவதும் சுமார்  4 கோடி போலி ரேஷன் கார்டுகள் ஒழிக்கப்பட்டுள்ளன.   நேரடி பணப்பரிமாற்றத்தின் மூலம் 10 கோடி போலி பயனாளிகளை நீக்கியுள்ளனர்.  "ஏழைகள் அவர்களுக்காக திட்டமிடப்பட்ட திட்டங்களிலிருந்து பறிக்கப்படுகிறார்கள்," எனக் கூறியுள்ளார். ஏழைகளின் ஆசிர்வாதம் பெற்றவன் நான். காங்கிரஸ்  ஏழைகளை துஷ்பிரயோகம் செய்கின்றது.  அதனால்தான், 'ஃபிர் ஏக் பார், மோடி சர்க்கார்' என தேசம் முடிவு செய்துள்ளது." என பேசியுள்ளார்.