25 ஆண்டுகள் அரசு பொறுப்பில் மோடி! டெல்லி விநாயகர் கோவிலில் பிரதமர் வழிபாடு!

 
மோடி

 

பிரதமர் நரேந்திர மோடி அரசு தலைவராக 25 ஆண்டுகளை நிறைவு செய்துள்ள நிலையில், டெல்லியில் உள்ள ஸ்ரீ விநாயகர் கோவிலில் இன்று வழிபாடு செய்தார்.பிரதமர் மோடியின் அரசு பொறுப்பில் பயணம் கடந்த 2001-ம் ஆண்டு அக்டோபர் 7-ந்தேதி தொடங்கியது. அன்றைய தினம் அவர் குஜராத் மாநில முதல்-மந்திரியாக பதவியேற்றார். 2014-ம் ஆண்டு மே மாதம் வரை குஜராத் முதல்-மந்திரியாக இருந்தார். அதன்பின்னர் நாட்டின் பிரதமராக பொறுப்பேற்றார். இதன்மூலம் அரசு தலைவராக தொடர்ந்து 25 ஆண்டுகளை நிறைவு செய்துள்ளார்.

மகாத்மா காந்தி மோடி

இந்த முக்கியமான நாளையொட்டி டெல்லி சரோஜினி நகரில் உள்ள ஸ்ரீ விநாயகர் கோவிலுக்கு பிரதமர் மோடி சென்றார். அங்கு விநாயகருக்கு சிறப்பு பூஜை செய்து வழிபட்டார்.வழிபாட்டுக்குப் பிறகு பிரதமர் மோடி தனது சமூக வலைதளப் பதிவில், டெல்லியில் உள்ள ஸ்ரீ விநாயகர் கோவிலில் இன்று பூஜை செய்து வழிபட்டதாக தெரிவித்தார். நாடு முழுவதும் உள்ள மக்களின் மகிழ்ச்சி, செழிப்பு மற்றும் நல்ல ஆரோக்கியத்துக்காக விநாயகரிடம் பிரார்த்தனை செய்ததாகவும் அவர் குறிப்பிட்டார்.

மேலும், விநாயகர் தடைகளை நீக்கும் இறைவனாக போற்றப்படுவதால், அவரது அருளால் அனைவருக்கும் நன்மை கிடைக்க வேண்டும் என்றும், இந்தியா தொடர்ந்து முன்னேற்றப் பாதையில் பயணிக்க வேண்டும் என்றும் பிரதமர் மோடி தனது பதிவில் தெரிவித்துள்ளார்.

இதற்கிடையே, பிரதமர் மோடி அரசு பொறுப்பில் 25 ஆண்டுகளை நிறைவு செய்ததை முன்னிட்டு நாடு முழுவதும் பா.ஜ.க. மற்றும் அதன் கூட்டணி கட்சிகள் சார்பில் பல்வேறு நிகழ்ச்சிகள் நடைபெற்று வருகின்றன. மத்திய அமைச்சரவையும் அவரது 25 ஆண்டு அரசு தலைமையை பாராட்டி தீர்மானம் நிறைவேற்றியுள்ளது.மோடியின் 25 ஆண்டு அரசு பொறுப்பு பயணம் குஜராத் முதல்-மந்திரி பதவியில் தொடங்கி, தற்போது பிரதமர் பதவி வரை தொடர்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.