லாரி மோதி 14 பக்தர்கள் பலி - பிரதமர் மோடி இரங்கல், நிதியுதவி அறிவிப்பு!

 
வெளிநாடு மோடி பயணம் வணக்கம்

மத்தியப் பிரதேச மாநிலம் குவாலியரில் நெல் ஏற்றி வந்த லாரி கட்டுப்பாட்டை இழந்து பக்தர்கள் கூட்டத்திற்குள் புகுந்த விபத்தில் பதினான்கு பேர் பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

மத்தியப் பிரதேசத்தின் குவாலியர் நகரில் அமைந்துள்ள ஷீத்லா மாதா கோவில் அருகே ஏராளமான பக்தர்கள் நின்று கொண்டிருந்தனர். அப்போது அந்த வழியாக அதிவேகமாக வந்த நெல் ஏற்றிய லாரி ஒன்று திடீரென ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து அங்கிருந்த பக்தர்கள் மீது பயங்கரமாக மோதியது. இந்த கோர விபத்தில் சம்பவ இடத்திலேயே பதினான்கு பேர் உயிரிழந்தனர். மேலும் நாற்பதுக்கும் மேற்பட்டோர் பலத்த காயமடைந்தனர்.

விபத்து மரணம் கொலை  தற்கொலை

விபத்தில் காயமடைந்த அனைவரும் உடனடியாக மீட்கப்பட்டு அருகில் உள்ள மருத்துவமனைகளில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். அவர்களில் ஐந்து பேரின் உடல்நிலை தொடர்ந்து கவலைக்கிடமாக இருப்பதாக மருத்துவமனை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

மத்தியப் பிரதேசத்தில் நிகழ்ந்த இந்த துயரச் சம்பவத்திற்குக் பிரதமர் நரேந்திர மோடி தனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துள்ளார். குவாலியர் நகரில் நடந்த விபத்து குறித்த செய்தியறிந்து மிகுந்த வேதனை அடைந்ததாகக் குறிப்பிட்டுள்ள அவர், உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்குத் தனது ஆறுதலைத் தெரிவித்துக்கொள்வதாகவும், காயமடைந்தவர்கள் விரைவில் முழு நலம் பெறப் பிரார்த்திப்பதாகவும் தெரிவித்துள்ளார்.

கொலை தற்கொலை வெட்டி மரணம் விபத்து

இதனைத் தொடர்ந்து, பிரதமரின் தேசிய நிவாரண நிதியிலிருந்து (PMNRV) விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்குத் தலா இரண்டு லட்சம் ரூபாயும், படுகாயமடைந்து சிகிச்சை பெற்று வருபவர்களுக்குத் தலா ஐம்பதாயிரம் ரூபாயும் நிதியுதவியாக வழங்கப்படும் என்று பிரதமர் மோடி அறிவித்துள்ளார்.