பிரான்சில் ஜி7 மாநாட்டில் பிரதமர் மோடி - ட்ரம்ப் சந்திப்பு.. வெள்ளை மாளிகை அறிவிப்பு!

 
ட்ரம்ப் மோடி ட்ரம்ப் மோடி

பிரான்ஸ் நாட்டின் எவியன் லெஸ் பெய்ன்ஸ் நகரில், இந்த ஆண்டிற்கான புகழ்பெற்ற 'ஜி7 உச்சிமாநாடு' நாளை ஜூன் 15-ம் தேதி முதல் 17-ம் தேதி வரை மிகவும் பிரம்மாண்டமாக நடைபெறவுள்ளது. பிரான்ஸ் நாட்டின் தலைமையில் அரங்கேறவிருக்கும் இந்த உயர்மட்ட மாநாட்டில், உலகளாவிய பொருளாதார மீட்சி, சர்வதேச ஒற்றுமை மற்றும் தற்போதைய ஹாட் டாப்பிக்கான செயற்கை நுண்ணறிவின் பாதுகாப்பான பயன்பாடு ஆகியவை குறித்து உலகத் தலைவர்கள் அக்குவேறு ஆணிவேறாக விவாதிக்க உள்ளனர்.

ட்ரம்ப்

இந்த சர்வதேச மாநாட்டில் பங்கேற்பதற்காக, இந்தியப் பிரதமர் நரேந்திர மோடிக்குச் சிறப்பு அழைப்பாளராகப் பிரான்ஸ் அரசு முறைப்படி அழைப்பு விடுத்துள்ளது. உலக அரங்கில் இந்தியாவின் முக்கியத்துவத்தை உணர்த்தும் வகையில் இம்மாநாட்டில் கலந்துகொள்ளும் பிரதமர் மோடி, 'குளோபல் சவுத்'  எனப்படும் வளரும் நாடுகளின் தேவைகள் மற்றும் எதிர்பார்ப்புகளை உலகத் தலைவர்கள் மத்தியில் பலமாக முன்னிலைப்படுத்த உள்ளார்.

மோடி ட்ரம்ப்

இந்நிலையில், அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்பும் இந்த ஜி7 மாநாட்டில் பங்கேற்பதற்காகப் பிரான்ஸ் வரவுள்ளதாகவும், அங்கு அவர் பாரதப் பிரதமர் நரேந்திர மோடியை நேருக்கு நேர் சந்தித்துப் பேச்சுவார்த்தை நடத்துவார் என்றும் அமெரிக்காவின் வெள்ளை மாளிகை அதிகாரபூர்வமாக வெளியிட்டுள்ளது. இந்த உயர்மட்டச் சந்திப்பின் போது, உலக வர்த்தகத்தைப் பாதிக்கும் வகையில் ஹார்முஸ் ஜலசந்தியில்  நிலவி வரும் மிக மோசமான சிக்கல்களுக்கு முற்றுப்புள்ளி வைப்பது குறித்தும் இரு தலைவர்களும் தீவிரமாக ஆலோசனை நடத்த உள்ளனர்.

ஜி7 மாநாட்டின் இடையே உலக வல்லரசு நாடான அமெரிக்காவின் அதிபர் டிரம்ப் மற்றும் இந்தியப் பிரதமர் மோடி ஆகியோர் சந்திக்கவிருக்கும் இந்தச் சுடச்சுட செய்தி, சர்வதேச அரசியல் வட்டாரத்தில் மிகப்பெரிய விவாதத்தையும், எதிர்பார்ப்பையும் ஏற்படுத்தியுள்ளது.