பிரதமர் மோடி - ஜெலன்ஸ்கி சந்திப்பு சமூக வலைதளத்தில் சாதனை... 15+ லட்சம் லைக்ஸ்களை குவித்தது!
பிரதமர் மோடியுடனான ஜெலன்ஸ்கியின் சந்திப்பு புகைப்படம் 15 லட்சத்திற்கும் அதிகமான லைக்ஸ் பெற்று சமூக வலைதளத்தில் சாதனை படைத்துள்ளது.
முதல் முறையாக உக்ரைன் சென்ற பிரதமர் மோடி அந்த நாட்டு அதிபர் ஜெலன்ஸ்கியை சந்தித்து பேசினார். அப்போது பிரதமர் மோடியுடன் ஜெலன்ஸ்கி புகைப்படம் எடுத்துக்கொண்டார். பின்னர் அவற்றை தனது இன்ஸ்டாகிராம் சமூக வலைத்தளத்தில் வெளியிட்டார். அதில், 'இந்தியா-உக்ரைன் இடையேயான உறவுகள் மற்றும் பேச்சுவார்த்தையை வலுப்படுத்துவதற்கு எங்கள் சந்திப்பு முக்கியமானது' என குறிப்பிட்டு இருந்தார்.
ஜெலன்ஸ்கியின் இந்த பதிவு சில மணி நேரங்களில் 15 லட்சத்துக்கு மேற்பட்ட 'லைக்ஸ்'களை பெற்றது. இது அவரது சமூக வலைத்தள பதிவுகளில் சாதனையாக மாறியது. இதற்கு முன் 7.8 லட்சம் 'லைக்ஸ்'களை பெற்றதே அவரது அதிகபட்சமாக இருந்தது.
தற்போது மோடியுடனான புகைப்படம் அதை முறியடித்து இருக்கிறது. சமூக வலைத்தளத்தில் அதிக பின்தொடர்பாளர்களை கொண்ட உலக தலைவர்கள் பட்டியலில் பிரதமர் மோடி முதலிடத்தில் இருப்பதே இதற்கு காரணம் ஆகும் என்று கூறப்படுகிறது.
ஆவணி மாத சிறப்புக்கள் , வழிபாடுகள், பண்டிகைகள்!
லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!
காதலித்து கர்ப்பமாக்கிய காதலன்... கைக்குழந்தையுடன் காதலி தர்ணா