காமராஜர், அண்ணா, எம்.ஜி.ஆர் சிலைகளுக்கு பிரதமர் மோடி மலர்தூவி மரியாதை... நாகர்கோவிலில் தொண்டர்கள் ஆர்ப்பரிப்பு!

 
மோடி மோடி

கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவிலில் இன்று மாலை நடைபெற்ற தேசிய ஜனநாயகக் கூட்டணியின் ரோடு ஷோ, தமிழகத்தின் முன்னாள் முதலமைச்சர்களுக்கு மரியாதை செலுத்தும் ஒரு நிகழ்வாகவும் அமைந்தது.

இன்று மாலை தனது ரோடு ஷோவைத் தொடங்குவதற்கு முன்னதாக, வேப்பமூடு சந்திப்பில் உள்ள பெருந்தலைவர் காமராஜர் சிலைக்குப் பிரதமர் நரேந்திர மோடி மலர்தூவி மரியாதை செலுத்தினார். வடசேரி பகுதியில் தனது 1.5 கி.மீ தூர ரோடு ஷோவை நிறைவு செய்த பிரதமர், அங்குள்ள மறைந்த முன்னாள் முதலமைச்சர்கள் பேரறிஞர் அண்ணா மற்றும் பாரத ரத்னா எம்.ஜி.ஆர் ஆகியோரின் உருவச் சிலைகளுக்கும் மலர்தூவி மரியாதை செலுத்தினார்.

மோடி

அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி மற்றும் தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் ஆகியோருடன் இணைந்து பிரதமர் இந்தப் பணிகளை மேற்கொண்டார். திராவிட இயக்கத்தின் முன்னோடிகளான அண்ணா மற்றும் எம்.ஜி.ஆருக்குப் பிரதமர் மரியாதை செலுத்தியது, அதிமுக தொண்டர்களிடையே பெரும் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தமிழகத்தின் பண்பாடு மற்றும் தலைவர்களின் புகழைத் தேசிய அளவில் கொண்டு செல்லும் முயற்சியாக இது பார்க்கப்படுகிறது. மேலும், காமராஜர் சிலைக்கு முதலில் மரியாதை செலுத்தியதன் மூலம், கல்வி மற்றும் வளர்ச்சி அரசியலுக்குத் தான் முக்கியத்துவம் அளிப்பதாகப் பிரதமர் வெளிப்படுத்தியுள்ளார்.