80-வது சுதந்திர தினம்: காந்தி நினைவிடத்தில் பிரதமர் மோடி மரியாதை!

 
காந்தி நினைவிடத்தில் பிரதமர் மோடி மரியாதை

இந்தியாவின் 80-வது சுதந்திர தின விழா நாடு முழுவதும் கோலாகலமாகக் கொண்டாடப்பட்டு வரும் சூழலில், தலைநகர் டெல்லி ராஜ்காட்டில் அமைந்துள்ள தேசத்தந்தை மகாத்மா காந்தியின் நினைவிடத்தில் பிரதமர் நரேந்திர மோடி மலர்தூவி மரியாதை செலுத்தினார்.

வரலாற்றுச் சிறப்புமிக்க செங்கோட்டையில் தேசியக் கொடியேற்றி நாட்டு மக்களுக்கு உரையாற்றுவதற்கு முன்பாக டெல்லி ராஜ்காட் சென்றடைந்த பிரதமர் மோடி, அண்ணல் காந்தியின் சமாதியில் மலர் தூவி மரியாதை செய்தார்.

சுதந்திரப் போராட்டத்திற்கு வித்திட்ட தியாகிகளின் இணையற்ற அர்ப்பணிப்புகளையும் தியாகங்களையும் நினைவுகூர்ந்த பிரதமர், தேசம் என்றும் அமைதி, அகிம்சை மற்றும் ஒற்றுமையின் பாதையில் பயணிக்க உறுதியேற்றார்.

ராஜ்காட்டில் மரியாதை செலுத்தியதைத் தொடர்ந்து செங்கோட்டைக்கு வருகை தந்த பிரதமருக்கு முப்படைகளின் உயராதிகாரிகள் சார்பில் கம்பீரமான ராணுவ அணிவகுப்பு வரவேற்பு அளிக்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து பிரதமர் 13-வது முறையாகத் தேசியக் கொடியேற்றி வைத்துத் தன்னுரையை ஆற்றினார்.