16-ம் தேதி பிலிப்பைன்ஸ் செல்கிறார் பிரதமர் மோடி.. முக்கிய சர்வதேச மாநாடுகளில் பங்கேற்பு!
பிரதமர் நரேந்திர மோடி வரும் நவம்பர் 16-ஆம் தேதி பிலிப்பைன்ஸ் நாட்டுக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ள உள்ளார். அந்நாட்டு அதிபர் பெர்டினாண்ட் மார்கோஸ் ஜூனியரின் அழைப்பை ஏற்று இந்தப் பயணத்தை அவர் மேற்கொள்கிறார்.
இதன்போது, பிலிப்பைன்ஸ் தலைநகர் மணிலாவில் நவம்பர் 17-ஆம் தேதி நடைபெறவுள்ள 23-வது ஆசியான் - இந்தியா உச்சி மாநாட்டில் பிரதமர் மோடி பங்கேற்கிறார். தொடர்ந்து, 21-வது கிழக்கு ஆசிய உச்சி மாநாட்டிலும் அவர் கலந்து கொள்கிறார்.
இந்த மாநாடுகளில் இந்தியா மற்றும் ஆசியான் நாடுகளுக்கு இடையிலான வர்த்தகம், கடல்சார் ஒத்துழைப்பு, பிராந்திய பாதுகாப்பு மற்றும் பொருளாதார உறவுகளை மேம்படுத்துவது குறித்து ஆலோசிக்கப்பட உள்ளது.
இந்தியா - ஆசியான் இடையிலான விரிவான உத்திசார் கூட்டாண்மையின் செயல்பாடுகள் குறித்தும், 2026 முதல் 2030 வரையிலான செயல்திட்டங்கள் குறித்தும் மாநாட்டில் விவாதிக்கப்பட உள்ளது.மேலும், சர்வதேச மற்றும் பிராந்திய விவகாரங்கள் குறித்தும் உலகத் தலைவர்களுடன் பிரதமர் மோடி ஆலோசனை நடத்த உள்ளார். நவம்பர் 16 மற்றும் 17 ஆகிய தேதிகளில் இந்தப் பயணம் திட்டமிடப்பட்டுள்ளது.
