ஹார்மூஸ் நீரிணை விவகாரம் - பிரிக்ஸ் மன்றக் கூட்டத்தில் பிரதமர் மோடி வலியுறுத்தி பேச்சு!

 
ஹார்முஸ் ஹார்மூஸ் மோடி

டெல்லியில் நடைபெற்ற பிரிக்ஸ் வர்த்தக மன்றக் கூட்டத்தில் கலந்துகொண்டு உரையாற்றிய பிரதமர் நரேந்திர மோடி, உலகளாவிய வர்த்தக வளர்ச்சிக்குத் தடையற்ற மற்றும் பாதுகாப்பான கடல்வழிப் பாதைகளின் முக்கியத்துவத்தை வலியுறுத்தியுள்ளார்.

உலகளாவிய வர்த்தகத்தில் முக்கியப் பங்காற்றும் ஹார்மூஸ் நீரிணை விவகாரத்தை மையமாகக் குறிப்பிட்டு அவர் இந்தக் கருத்துகளைத் தெரிவித்தார்.

இந்தியா கப்பல் ஹார்முஸ் எண்ணெய் ஏற்றுமதி

கடல்வழிப் பாதைகளும், அதில் பணியாற்றும் மாலுமிகளும் எந்தவித அச்சுறுத்தலுமின்றி முழுப் பாதுகாப்புடன் இயங்கும் சூழல் உறுதி செய்யப்படும்போது மட்டுமே, உலக நாடுகளுக்கு இடையேயான வர்த்தகம் எந்தவிதத் தடையும் இல்லாமல் சீராக முன்னேற முடியும் என்று அவர் அழுத்தமாகக் குறிப்பிட்டார்.

பிரிக்ஸ் நாடுகளுக்கு இடையேயான பொருளாதார உறவுகளை மேம்படுத்துவதுடன், உலகப் பொருளாதார ஸ்திரத்தன்மைக்குத் தடையற்ற விநியோகச் சங்கிலி மிகவும் அவசியமானது என்பதையும் அவர் சுட்டிக்காட்டினார்.