அக்.11-ல் சென்னை வருகிறார் பிரதமர் மோடி.. பூந்தமல்லி - வடபழனி மெட்ரோ ரயில் சேவையைத் தொடங்கி வைக்கிறார்!

 
மோடி மெட்ரோ

சென்னையில் இரண்டாம் கட்ட மெட்ரோ ரயில் திட்டத்தின் கீழ் முடிக்கப்பட்டுள்ள பூந்தமல்லி - வடபழனி இடையிலான புதிய மெட்ரோ ரயில் சேவையை வரும் அக்டோபர் 11ம் தேதி பிரதமர் நரேந்திர மோடி கொடியசைத்துத் தொடங்கி வைக்க உள்ளார்.

சென்னையில் 118.9 கி.மீ தொலைவுக்கு 3 வழித்தடங்களில் இரண்டாம் கட்ட மெட்ரோ ரயில் திட்டப் பணிகள் நடைபெற்று வருகின்றன. இதில் கலங்கரை விளக்கம் - பூந்தமல்லி வழித்தடத்தில் பூந்தமல்லி - வடபழனி இடையிலான பணிகள் முழுமையாக முடிக்கப்பட்டு, ரயில்வே பாதுகாப்பு ஆணையரின் ஒப்புதலும் பெறப்பட்டுள்ளது.

வெளிநாடு மோடி விமானத்தில்

அக்டோபர் 11ம் தேதி சென்னை ஐஐடியில் நடைபெறும் நிகழ்ச்சியில் பங்கேற்கும் பிரதமர் மோடி, மெட்ரோ ரயில் சேவையைத் தொடங்கி வைப்பதோடு, 3 தேசிய நெடுஞ்சாலைத் திட்டப் பணிகளையும், இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் திட்டப் பணிகளையும் நாட்டுக்கு அர்ப்பணிக்க உள்ளார். மேலும், தொடக்க விழாவிற்குப் பிறகு அவர் மெட்ரோ ரயிலில் பயணமும் மேற்கொள்ளவுள்ளார். இத்தொடக்க விழாவில் பிரதமர் மோடியும், முதலமைச்சர் விஜய்யும் ஒரே மேடையில் கலந்துகொள்ள இருக்கின்றனர்.

மோடி மெட்ரோ

இரண்டாம் கட்ட மெட்ரோ ரயில் திட்டத்தில் பொதுமக்கள் பயன்பாட்டுக்கு வரும் முதல் சேவை இதுவாகும். மொத்தம் 14.64 கிலோ மீட்டர் தூரம் மற்றும் 11 உயர்மட்ட நிலையங்களைக் கொண்ட இந்தச் சேவை பயன்பாட்டுக்கு வருவதன் மூலம், பூந்தமல்லி - வடபழனி இடையேயான போக்குவரத்து நெரிசல் பெருமளவில் குறையும் என எதிர்பார்க்கப்படுகிறது.