பாமக அன்புமணி ராமதாஸுக்கு வலது கால் மூட்டில் அறுவை சிகிச்சை.. நலமுடன் வீடு திரும்பினார்!

 
அன்புமணி ராமதாஸ்

பாமக தலைவர் டாக்டர் அன்புமணி ராமதாசுக்குச் சென்னையில் உள்ள பிரபல அப்பல்லோ மருத்துவமனையில் வலது கால் மூட்டுப் பகுதியில் சிறிய அறுவை சிகிச்சை வெற்றிகரமாக மேற்கொள்ளப்பட்டுள்ளது. 

பாமக தலைமை நிலையம் வெளியிட்டுள்ள அதிகாரப்பூர்வ செய்திக்குறிப்பின்படி, சென்னை கிரீம்ஸ் சாலையில் அமைந்துள்ள அப்பல்லோ மருத்துவமனையில் டாக்டர் அன்புமணி ராமதாஸுக்கு நேற்று முன்தினம் வலது கால் மூட்டில் சிறிய அறுவை சிகிச்சை செய்யப்பட்டுள்ளது. சிகிச்சை வெற்றிகரமாக நிறைவடைந்ததைத் தொடர்ந்து, அவர் மருத்துவமனையில் இருந்து இன்று வீடு திரும்பியுள்ளார். தற்போது அவர் பூரண உடல் நலத்துடன் ஓய்வெடுத்து வருவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அன்புமணி

அறுவை சிகிச்சைக்குப் பிறகு, அடுத்த இரண்டு வாரங்களுக்குத் தொடர்ந்து உடலியக்கப் பயிற்சி  மேற்கொள்வதுடன், முழுமையான ஓய்வு எடுக்குமாறு மருத்துவர்கள் அவருக்கு அறிவுறுத்தியுள்ளனர்.