“ஆயிரம் பிறை கண்ட அயராத ஆலமரம்” இன்று பாமக நிறுவனர் ராமதாஸ் 86-ம் பிறந்தநாள் : மகன் அன்புமணி ராமதாஸ் வாழ்த்து!

 
23 மீனவர்கள் சிங்களப் படையால் கைது: மீனவர் சிக்கலுக்கு நிரந்தர தீர்வு தேவை! – டாக்டர் ராமதாஸ்

இன்று தனது 86வது பிறந்தநாளைக் கொண்டாடுகிறார் பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ். இந்நிலையில், தனது ட்விட்டர் பதிவில் ராமதாஸின் மகனும், முன்னாள் எம்.பி.யுமான அன்புமணி ராமதாஸ், “அருஞ்சொல் பொருள் அகராதியில் சமூகநீதி என்பதற்கு  இலக்கணமாய் வாழ்த்து கொண்டிருக்கும் தமிழ்க்குலத்தின் முதல்வன் மருத்துவர் அய்யா அவர்களுக்கு  இன்று 86-ஆம் பிறந்தநாள்.  அவரால் வாழ்வு பெற்ற கோடிக்கணக்கான சொந்தங்களில் ஒருவனாக  ஈடு இணையற்ற அந்த பெருந்தலைவனுக்கு எனது வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.


பாட்டாளி மக்கள் கட்சியின் தலைவராகவும், 35வயதில் இந்தியாவின் இளம் சுகாதாரத்துறை அமைச்சராகவும், சுற்றுச்சூழல் போராளியாகவும் பொறுப்பேற்று நாட்டு மக்களக்கு பல்வேறு சேவைகளை செய்தது, அதற்காக பல்வேறு விருதுகளையும், பாராட்டுகளையும் பெற்றது உள்ளிட்ட நான் பெற்ற பேறுகள் அனைத்திற்கும் காரணம் நீங்கள் தான் அய்யா. 

மேகதாது அணை குறித்து கர்நாடக அரசுடன் பேச்சு நடத்தக் கூடாது! – டாக்டர் அன்புமணி ராமதாஸ்

என்னைப்போலவே, உலகின் 140 நாடுகளில் பல்வேறு பெரும் பொறுப்புகளை வகித்து லட்சக்கணக்கான இளைஞர்கள் தலைநிமிர்ந்து வாழ்வதற்கு காரணமான தனிப்பெரும் நாயகன் மருத்துவர் அய்யா. அவர்களின் அனைத்துக் கனவுகளையும் நனவாக்குவதற்காக கடுமையாக உழைக்க இந்த நன்நாளில் நாம் அனைவரும் உறுதியேற்றுக் கொள்வோம்!”

ஆடி மாதத்தில் சுபகாரியங்களை செய்யலாமா? கூடாதா?!

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

காதலித்து கர்ப்பமாக்கிய காதலன்... கைக்குழந்தையுடன் காதலி தர்ணா