தவெக கூட்டணியில் பாமக சேரலாம், சௌமியா அன்புமணி அமைச்சராகவும் ஆகலாம்" - துரைமுருகன் நக்கல்!

 
துரைமுருகன் செளமியா அன்புமணி

தவெக மற்றும் பாமக இடையேயான சாத்தியமான கூட்டணி நகர்வுகள் குறித்து திமுக பொதுச்செயலாளர் துரைமுருகன் செய்தியாளர்களிடம் நக்கலாகவும் வெளிப்படையாகவும் கருத்து தெரிவித்துள்ளார்.

சமீபத்திய அரசியல் பிரச்சாரக் கூட்டங்களில் தவெக மேடைகளில் பாமக கொடிகளும் பறந்ததைச் சுட்டிக்காட்டிய அவர், "அவர்களின் அணியில் பாமக சேரலாம், சௌமியா அன்புமணி அமைச்சராகக் கூட ஆகலாம்... யார் கண்டா, இதெல்லாம் நடக்கும் சார்" என்று கிண்டலாகக் குறிப்பிட்டுள்ளார்.

சௌமியா ஆதவ் அர்ஜுனா

தவெக கூட்டணியில் இணைவது குறித்தும், அமைச்சரவையில் பொறுப்பேற்பது குறித்தும் பரவி வரும் தகவல்கள் முற்றிலும் வதந்தி எனப் பாமக தரப்பில் ஏற்கனவே திட்டவட்டமாக மறுக்கப்பட்டிருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.

நாளை இடைத்தேர்தல் வாக்குப்பதிவு நடைபெற உள்ள சூழலில், அரசியல் கட்சிகளுக்கு இடையேயான கூட்டணிப் பேச்சுக்கள் மற்றும் எதிர்க கணிப்புகள் தமிழக அரசியல் களத்தில் பெரும் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளன.