பாமக ஜி.கே.மணியின் மகன் தமிழ்க்குமரன் காங்கிரஸ் கட்சியில் இணைந்தார்!

 
ஜிகே மணி தமிழ்க்குமரன் ஜிகே மணி தமிழ்க்குமரன்

பாட்டாளி மக்கள் கட்சியின் கௌரவத் தலைவர் ஜிகே மணியின் மகனும், அக்கட்சியின் முன்னாள் இளைஞரணித் தலைவருமான ஜிகேஎம் தமிழ்க்குமரன், இன்று அதிகாரப்பூர்வமாகக் காங்கிரஸ் கட்சியில் இணைந்தார்.

தலைநகர் டெல்லியில் உள்ள காங்கிரஸ் தலைமை அலுவலகத்தில் நடைபெற்ற நிகழ்வில், அகில இந்திய காங்கிரஸ் கமிட்டித் தலைவர் மல்லிகார்ஜூன கார்கே மற்றும் பொதுச்செயலாளர் கே.சி. வேணுகோபால் ஆகியோர் முன்னிலையில் தமிழ்க்குமரன் தன்னை அக்கட்சியில் இணைத்துக் கொண்டார். தமிழகச் சட்டமன்றத் தேர்தல் நெருங்கும் வேளையில், பாமகவின் மிக முக்கியமான குடும்பத்தைச் சேர்ந்த ஒருவர் காங்கிரஸில் இணைந்தது அரசியல் வட்டாரத்தில் பேசுபொருளாகியுள்ளது.

 ராமதாஸும், அன்புமணியும் சந்தித்து பேச வேண்டும்...  பிரச்னைகளை பார்த்து  கண்ணீர் வடித்தேன்... பாமக ஜி.கே.மணி வேதனை!

லைகா திரைப்படத் தயாரிப்பு நிறுவனத்தின் தலைமைச் செயல் அதிகாரியாக இருந்து வருகிறார். 'பொன்னியின் செல்வன்', 'இந்தியன் 2', 'வேட்டையன்' போன்ற பிரம்மாண்ட படங்களின் தயாரிப்பு நிர்வாகத்தில் முக்கியப் பங்கு வகித்தவர். ஜோதிகா நடித்த 'நாச்சியார்' படத்திலும் நடித்துள்ளார். கடந்த பிப்ரவரி 2026-ல் நடைபெற்ற தமிழ்த் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கத் தேர்தலில், வரலாறு காணாத வகையில் 788 வாக்குகள் பெற்று அமோக வெற்றி பெற்றார்.

2010ம் ஆண்டு பென்னாகரம் தொகுதி இடைத்தேர்தலில் பாமக சார்பில் போட்டியிட்டார். 2022-ல் அன்புமணி ராமதாஸ் வகித்து வந்த பாமக இளைஞரணித் தலைவர் பதவிக்கு நியமிக்கப்பட்ட அவர், வெறும் 3 மாதங்களிலேயே அந்தப் பதவியிலிருந்து விலகியது அப்போது பெரும் விவாதத்தைக் கிளப்பியது.

பாமக ஜி.கே.மணி

பாமக-வின் அதிகாரப்பூர்வ தொலைக்காட்சியான 'மக்கள் தொலைக்காட்சி' குழுமத்தின் இயக்குநராகவும் இருந்து வந்த தமிழ்க்குமரன், நீண்ட நாட்களாகவே பாமக தலைமையுடன் சற்று இடைவெளி விட்டு இருந்து வந்ததாகக் கூறப்படுகிறது. குறிப்பாக, அன்புமணி ராமதாஸுடன் ஏற்பட்ட சில கருத்து வேறுபாடுகள் காரணமாகவே அவர் தீவிர அரசியலில் இருந்து ஒதுங்கி இருந்ததாகத் தெரிகிறது. இந்நிலையில், தற்போது காங்கிரஸில் இணைந்து தனது அரசியல் பயணத்தை மீண்டும் தொடங்கியுள்ளார்.