இடைத்தேர்தலில் பாமகவின் திடீர் நடுநிலை நிலைப்பாடு - அதிமுகவுக்குப் பின்னடைவா?!
வரவிருக்கும் இடைத்தேர்தல்களில் எந்தக் கட்சிக்கும் ஆதரவு அளிக்காமல் நடுநிலை வகிக்கப் போவதாக பாட்டாளி மக்கள் கட்சி அறிவித்துள்ள முடிவு, பிரதான கட்சிகளிடையேயான தேர்தல் கணக்கீடுகளில் மாற்றங்களை ஏற்படுத்தியுள்ளது.
கடந்த சட்டமன்றத் தேர்தலில் அதிமுக கூட்டணியில் இடம்பெற்றுப் போட்டியிட்ட பாமக, தற்போது வரவிருக்கும் இடைத்தேர்தலில் எந்தவொரு கட்சிக்கும் ஆதரவு வழங்குவதில்லை எனத் திட்டவட்டமாக அறிவித்துள்ளது.

இடைத்தேர்தலில் பாமகவின் ஆதரவைப் பெறுவதற்காக அதிமுகவின் முன்னாள் அமைச்சர்கள் நேரடியாகவே பாமக தலைவர் அன்புமணி ராமதாஸைச் சந்தித்துப் பேச்சுவார்த்தை நடத்திய போதிலும், அவர் தனது நடுநிலை நிலைப்பாட்டில் உறுதியாக இருந்துள்ளார்.
குறிப்பாக மதுராந்தகம் போன்ற தொகுதிகளில் கணிசமான அளவில் வன்னியர் வாக்கு வங்கி உள்ளதால், பாமக தேர்தலிலிருந்து ஒதுங்குவது அந்த வாக்குகளின் திசையை மாற்றக்கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது.
பாமகவின் இந்தத் திடீர் முடிவு எதிர்க்கட்சியான அதிமுகவிற்குப் பின்டைவாகப் பார்க்கப்படுவதோடு, இந்த வாக்குச் சிதறல்கள் ஆளுங்கட்சியான தவெக பக்கம் பலமாகத் திரும்பக்கூடும் என்றும் அரசியல் களத்தில் விவாதிக்கப்பட்டு வருகிறது.
