பகீர்... மகளை வாயில் விஷம் ஊற்றி பெற்றோர் கொடூரக் கொலை!
திருநெல்வேலி மாவட்டம் நாங்குநேரி செண்பகராமநல்லூர் பகுதியைச் சேர்ந்த 60 வயதுடைய சிவன் மற்றும் அவரது மனைவி 57 வயதுடைய வைரம்மாள் ஆகிய தம்பதிக்கு 5 மகள்கள் உள்ளனர். இவர்களில் 21 வயதுடைய ஐந்தாவது மகள் அமுதாவுக்கு இன்னும் திருமணம் ஆகவில்லை. இவர் தனது தாயுடன் சேர்ந்து வீட்டு வேலைகளைக் கவனித்து வந்துள்ளார்.

இந்நிலையில் இவர்களது வீட்டிற்கு அடிக்கடி வந்து சென்ற திருமணமான உறவினர் ஒருவருடன் அமுதாவுக்கு நெருக்கமான பழக்கம் ஏற்பட்டுள்ளது. இந்த விவகாரத்தை அறிந்த பெற்றோர் அதிர்ச்சியடைந்து அமுதாவை பலமுறை கண்டித்துள்ளனர். அந்த தவறான உறவை அமுதா கைவிட மறுத்ததால் அவருக்கும் பெற்றோருக்கும் இடையே வீட்டில் தொடர்ந்து கடுமையான குடும்பத் தகராறு ஏற்பட்டு வந்துள்ளது.
இதனால் ஆத்திரமடைந்த பெற்றோர் கடந்த சில தினங்களுக்கு முன்பு அமுதாவின் வாயில் வலுக்கட்டாயமாக விஷத்தை ஊற்றி, அவரது கழுத்தை நெரித்துக் கொடூரமாகக் கொலை செய்துள்ளனர். பின்னர் அமுதா தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டது போல் நாடகமாடி சடலத்தைத் தூக்கில் தொங்கவிட்டுள்ளனர். அமுதாவின் கழுத்தில் இருந்த காயங்களை வைத்து போலீசார் நடத்திய தீவிர விசாரணையில் பெற்றோரின் இந்த கொடூரக் கொலைச் செயல் அம்பலமானது.
