விஷமாகும் உணவுகள்... சூடுபடுத்தி சாப்பிடாதீங்க..அதிர்ச்சி ரிப்போர்ட்!

 
சிக்கன்
 

`உணவுகளை அடிக்கடி சூடுபடுத்தி சாப்பிடுவதால்  அதிலுள்ள சத்துகள் முற்றிலும் குறைந்துவிடும். அத்துடன் உடல் ஆரோக்கியத்துக்கும் கேடாய் முடியும். இதனால் புட்பாய்ஸனிங், இதய நோய், புற்றுநோய் உட்பட  பெரிய நோய்கள் வரை கொண்டுவிடும். இதனால் சில நேரங்களில் உயிருக்கே  ஆபத்தாய் முடியலாம்’ என எச்சரிக்கை விடுத்துள்ளனர் மருத்துவர்கள். அந்த வகையில் மீண்டும் சூடுபடுத்திச் சாப்பிடவே கூடாத 8 வகையான உணவுகள் பட்டியல் இதோ. 
 சிக்கன் பக்கோடா

கோழி இறைச்சி பொதுவாகவே புரதச்சத்து நிறைந்தது. இதனால் செரிமானம் ஆக, அதிக நேரம் எடுத்துக் கொள்ளும். சிக்கனைச் சூடுபடுத்துவதால்  புரதச்சத்து மேலும் அதிகரிக்கும்; 2வது முறை சூடு செய்து சாப்பிட்டால் அதுவே ஃபுட் பாய்சனாக மாறும் அபாயம் உண்டு. மீண்டும், மீண்டும் சூடுபடுத்திச் சாப்பிடக் கூடாது.  
 
கீரையில் நிறைந்திருக்கும்  இரும்புச்சத்து மற்றும் நைட்ரேட் சத்துக்கள் சூடுபடுத்தும்போது நைட்ரைட்டாக    மாறிவிடும்.  இதனால் புற்றுநோய் கூட உருவாகும் அபாயம் ஏற்படலாம்.  கீரை உணவுகளை மீண்டும் சூடுபடுத்திச் சாப்பிடுவதால், செரிமான பிரச்னைகள் உண்டாகும்; காளானில் நிறைந்துள்ள புரதச்சத்து  மீண்டும் சூடுபடுத்தும்போது  விஷமாக மாறிவிடுகிறது. இதனால் செரிமானக் கோளாறுகள், வயிற்று உபாதைகளை ஏற்படுத்தி விடும்.  
 முட்டை
வேகவைத்த அல்லது வறுத்த முட்டையை மீண்டும் சூடுபடுத்தினால், அது விஷமாக மாறும். இது, செரிமான பிரச்னை மற்றும் வயிற்றுக்கோளாறுகளை ஏற்படுத்திவிடும்.  முட்டையை எக்காரணம் கொண்டும்  சூடுபடுத்திச் சாப்பிடக் கூடாது.
 தென்னிந்தியாவை பொறுத்தவரை அரிசிவகை உணவுகளையே அதிகம் எடுத்துக் கொள்கிறோம்.  சோற்றை  மீண்டும் சூடுபடுத்திச் சாப்பிட்டால், அதில் நச்சுத்தன்மை அதிகரித்து,  ஃபுட் பாய்சனாக மாறிவிடும். அதே நேரத்தில் நீர் ஊற்றி அடுத்த நாள் காலை பழைய சோறாக்கி சாப்பிட்டால் உடலுக்கு குளிர்ச்சி. ஆனால் சூடுபடுத்தக்கூடாது. 


உருளைக்கிழங்கை ஒருமுறை சமைத்து ஃப்ரிட்ஜில் வைத்துவிட்டு, தேவைப்படும்போது சாப்பிடுவர். இப்படி செய்வதால்  சமைத்த உருளைக்கிழங்கில் உள்ள பாக்டீரியாக்கள் அதிலேயே தங்கி விடும் அபாயம் உண்டு.  இதனால் சில நேரங்களில்  வாந்தி, குமட்டல், உடல்நல பாதிப்பு எல்லாம் ஏற்படும்.
 எந்த வகை சமையல் எண்ணெயாக இருந்தாலும், அதைத் திரும்பத் திரும்ப சூடுபடுத்திப் பயன்படுத்தக் கூடாது. அந்த எண்ணெயின் அடர்த்தி அதிகரித்தபிறகு அதனை சாப்பிட  புற்றுநோய், இதய நோய்கள் ஏற்படக் காரணமாகவும் அமைந்துவிடும். 
பீட்ரூட்டில் நிறைந்திருக்கும் நைட்ரேட்டும் கீரை வகைகளை சேர்ந்ததே.  அதனால் பீட்ரூட்டையும் மீண்டும் சூடுசெய்து பயன்படுத்தக் கூடாது.

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

பங்குனி உத்திரத்தின் மகத்துவம் தெரிஞ்சுக்கோங்க..!

பங்குனி மாத பண்டிகைகள், விசேஷ நாட்கள்.... முழு பட்டியல்!

திடீர் ராஜ யோகத்தால் பணமழை கொட்ட போகும் 6 ராசிக்காரர்கள்

From around the web