வேதாந்தா இரும்பு ஆலையில் விஷவாயு கசிவு - 2 தொழிலாளர்கள் உயிரிழப்பு!

 
வேதாந்தா இரும்பு ஆலை தொழிற்சாலை விஷவாயு

ஜார்க்கண்ட் மாநிலம் பொகாரோ மாவட்டத்தில் உள்ள பிரபல இரும்பு உருக்கு ஆலையில் ஏற்பட்ட விஷவாயு கசிவு விபத்தில் இரண்டு தொழிலாளர்கள் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

ஜார்க்கண்டில் செயல்பட்டு வரும் வேதாந்தா நிறுவனத்திற்குச் சொந்தமான இரும்பு உருக்கு ஆலையில் திடீரென விஷவாயு கசிவு ஏற்பட்டுள்ளது. அப்போது ஆலையில் பணியில் ஈடுபட்டிருந்த இரண்டு தொழிலாளர்கள் அந்த வாயுவைச் சுவாசித்ததால் எதிர்பாராதவிதமாக மயங்கி விழுந்தனர்.

விஷவாயு கசிவு பஞ்சாப் தீயணைப்பு துறை மீட்பு பணி

உடனடியாகச் சக ஊழியர்கள் அவர்களை மீட்டு அருகில் உள்ள மருத்துவமனைக்கு விரைந்து கொண்டு சென்றனர். ஆனால், அவர்கள் மருத்துவமனைக்குச் செல்லும் வழியிலேயே ஏற்கனவே உயிரிழந்துவிட்டதாக மருத்துவர்கள் உறுதிப்படுத்தினர்.

பணியில் இருந்தபோது பாதுகாப்புக் குறைபாடு காரணமாக இச்சம்பவம் நிகழ்ந்துள்ளதா என்பது குறித்துக் காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.